Vijay: விஜய்யை ‘அப்படி பார்த்தது’ அதுதான் முதன்முறை... உடனே முடிவை மாற்றிய சிவகாசி பட பிரபலம்

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திலும் நடிக்கவுள்ளார்.
முன்னதாக 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி, சிவகாசி படங்கள் விஜய் கேரியரில் மிகப் பெரிய கம்பேக்காக அமைந்தன.

இந்தப் படங்களை இயக்கிய பேரரசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கோபமான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

 Director Perarasu opens up about Vijays angry incident on the sets of the Sivakasi film

விஜய்யை அப்படிப் பார்த்தது முதன்முறை 90களில் காதல் மன்னனாக வலம் வந்த விஜய், 2000ம் ஆண்டுக்கு பிறகு ஆக்‌ஷன் ஜானர் படங்களில் கவனம் செலுத்தினார். அந்த வரிசையில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. 2005ம் ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களுமே அண்ணன் - தங்கை பாசத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்தது.

திருப்பாச்சி படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷாவும், சிவகாசி படத்தில் விஜய்யுடன் அசினும் ஜோடியாக நடித்திருந்தனர். காமெடி, சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என பக்கா கமர்சியல் படமாக வெளியான திருப்பாச்சி, சிவகாசி விஜய்க்கும் ரொம்பவே ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை இயக்குநர் பேரரசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், விஜய் எப்போதுமே கொஞ்சம் ஜாலியான டைப் தான், அவர் எளிதில் யார் மீதும் கோபப்படமாட்டார். ஆனால், சில நேரங்களில் கோபம் வந்தாலும் அதனை உடனே வெளியே காட்டமாட்டார், வார்த்தைகளையும் விட்டுவிடமாட்டார். அதேபோல், விஜய்யிடம் சொன்னமாதிரி நடந்துகொண்டால் போதும், நம் மீது கோபம் வராது. இதெல்லாம் மீறி விஜய் சாரின் உச்சக்கட்ட கோபத்தை ஒருமுறை பார்த்தேன்.

 Director Perarasu opens up about Vijays angry incident on the sets of the Sivakasi film

சிவகாசி படத்திற்காக அவுட்டோரில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது சினிமா நிரூபர் ஒருவர் விஜய் சாரிடம் பேட்டி எடுக்கச் சென்றுள்ளாராம். அப்போது படப்பிடிப்புத் தளத்தில் போடப்பட்டிருந்த சின்ன செட்டிங், போஸ்டர்களை புகைப்படம் எடுத்துச் சென்றுள்ள நிரூபர், இதுதான் சிவகாசி படத்தின் கதையாக இருக்கும் என பத்திரிகையில் எழுதியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பேரரசு தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யும் இந்த செய்தியை படித்துவிட்டு உடனே இயக்குநர் பேரரசுக்கு போன் பேசியுள்ளார். அதுவரை பார்க்காத விஜய்யின் கோபம் அப்போதுதான் வெளியே தெரிந்துள்ளதாம். விஜய்யின் கோபத்தை பார்த்து மிரண்டு போன பேரரசு, அவர் படப்பிடிப்புக்கு வரும் போது கூல் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனாலும் விஜய்யின் உச்சக்கட்ட கோபத்தை பார்த்த பேரரசு, அந்த நேரத்தில் அவருக்கு இருந்த காட்சியை அப்படியே மாற்றிவிட்டாராம். விஜய்க்கு பதிலாக மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கியதாக இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X