படத்துல ஹீரோயின்தான் ஜெயிக்கிறாங்க.. நான் நடிக்க மாட்டேன் - அடம் பிடித்த விஜய்

சென்னை: ஹீரோயின்தான் படத்துல ஜெயிக்கிறாங்க அதனால் இந்தப் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் அடம் பிடித்த சம்பவம் தெரியவந்துள்ளது.

விஜய் தற்போது இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது ஒவ்வொரு படமும் பல நூறு கோடி ரூபாய் பிஸ்னஸ் ஆகக்கூடியவை. இதனால் அவரை நம்பி தயாரிப்பாளர்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்துவரும் லியோ படம்கூட ரிலீஸுக்கு முன்னதாகவே 400 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதல் படங்களில் நடித்த விஜய்

காதல் படங்களில் நடித்த விஜய்

விஜய் இப்போது மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்தாலும் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்தது அவர் ஆரம்பத்தில் நடித்த காதல் படங்கள்தான். பூவே உனக்காக படம் அவருக்கு முதல் மெகா ஹிட்டை பெற்றுக்கொடுத்தது. அதேபோல், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், குஷி என அவர் நடித்த காதல் படங்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் விஜய் இளைஞர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் எளிதாக கனெக்ட் ஆனார்.

விஜய்யை தூக்கிவிட்ட குடும்பத்தை மையப்படுத்திய படங்கள்

விஜய்யை தூக்கிவிட்ட குடும்பத்தை மையப்படுத்திய படங்கள்

காதல் படங்கள் விஜய்க்கு எப்படி கை கொடுத்தனவோ அதேபோல் குடும்ப சென்ட்டிமெண்ட்டுகளை அடிப்படையாக வைத்து உருவான படங்களும் அவருக்கு நன்றாகவே கை கொடுத்தன. அவர் நடித்த நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, ப்ரியாமனவளே உள்ளிட்ட படங்கள் அதில் குறிப்பிடத்தகுந்தவை. முக்கியமாக ப்ரியமானவளே படம் விஜய்யை பல குடும்பங்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என விஜய் அடம் பிடித்த சம்பவம் தற்போது தெரியவந்திருக்கிறது.

ஹீரோயினே ஜெயிக்கிறாங்க; அடம் பிடித்த விஜய்

ஹீரோயினே ஜெயிக்கிறாங்க; அடம் பிடித்த விஜய்

ப்ரியமானவளே படத்தை பொறுத்தவரை அது பெண்ணை சுற்றி கட்டமைக்கப்பட்ட கதை. ஹீரோயின் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்து நடிப்பில் அதகளம் செய்திருப்பார். விஜய்யும் அருமையாக நடித்திருப்பார். படம் முழுவதும் சிம்ரனே ரூல் செய்திருப்பார். எனவே அந்தப் படத்தின் கதையை கேட்ட விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம் விஜய்.

தெலுங்கில்1996ஆம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டடித்த பவித்ர பந்தம் படத்தின் ரீமேக்தான் ப்ரியமானவலே. இந்தப் படத்தின் உரிமையை எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிவிட்டாராம். அதனையடுத்து விஜய்யை நடிக்க சொல்லி கேட்டபோது; அதற்கு விஜய், 'இதுல என்ன ப்பா இருக்கு. ஹீரோயின்தானே ப்பா ஜெயிக்கிறாங்க. அவங்கதானே ஹீரோவ வாங்கு வாங்குனு வாங்குறாங்க' என கூறியிருக்கிறார். ஆனால் விடாப்பிடியாக நின்ற எஸ்.ஏ.சந்திரசேகர், இந்தப் படம் நிச்சயம் ஹிட்டாகும். உனது சம்பளம்தான் ஏறும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் ப்ரியமானவளே படத்தில் நடிக்க விஜய் ஒத்துக்கொண்டாராம்.

நினைத்தேன் வந்தாய் படத்துக்கும் விஜய்யின் அடம்

நினைத்தேன் வந்தாய் படத்துக்கும் விஜய்யின் அடம்

அதேபோல் ப்ரியமானவளே படத்துக்கு முன்னதாக வெளியாகி மெகா ஹிட்டான நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிப்பதற்கும் விஜய்க்கு விருப்பம் இல்லையாம். இந்தப் படமும் 1996ஆம் ஆண்டு தெலுங்கி வெளியாகி மெகா ஹிட்டான பெல்லி சந்தடி படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தின் உரிமையையும் எஸ்.ஏ.சி வாங்கி வைத்து விஜய்யிடம் நடிக்க சொல்ல; அதற்கும் விஜய், 'இதுல என்ன ப்பா இருக்கு. ரொம்ப பழசா இருக்கு' என்றிருக்கிறார்.

அதற்கு எஸ்.ஏ.சி, 'இந்தப் படம் ஹிட்டானால் ரம்பா படம் என்றோ; தேவயானி படம் என்றோ சொல்லமாட்டார்கள். விஜய் படம் என்றுதான் சொல்வார்கள்; அதனால் உனது சம்பளம்தான் ஏறும். இந்தப் படம் கண்டிப்பாக சில்வர் ஜுப்ளி கொண்டாடும்' என்று கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் விஜய் நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தவை. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் விஜய்யை நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் செல்வபாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X