காவல் துறையினரிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா.. அய்யோ அதிர்ச்சி சம்பவமா இருக்கே... இவ்வளவு நடந்திருக்கா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ராயன் ஆகிய திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. தெலுங்கில் சரிபோதா சனிவாரம் படம் வெளியாகி நல்ல பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இந்தச் சூழலில் அவர் பற்றி ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

throwback stories sj suryah saripodhaa sanivaaram

குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார். பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இசை படத்தை இயக்கினார்.

நடிகராக கலக்கிய சூர்யா: இதற்கிடையே கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான ராயன், இந்தியன் 2 ஆகிய படங்கள்வரை தொடர்கிறது. இந்தியன் 2 மட்டும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சமீபத்தில்தான் சரிபோதா சனிவாரம் படம் வெளியானது. அடுத்ததாக எல்ஐசி, சர்தார் 2 ஆகிய படங்கள் வரவிருக்கின்றன.

சிக்கிய எஸ்.ஜே.சூர்யா: இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா காவல் துறையில் சிக்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது வாலி படத்தை இயக்குவதற்கு முன்பு டிஸ்கஷனில் இருந்தாராம் சூர்யா. எப்போதும் அதிகாலை 3 மணிக்குத்தான் தூங்க செல்வாராம். அப்படி ஒருநாள் விழித்திருந்தபோது சர்ச்சுக்கு சென்று வழிபட்டு வரலாம் என்று நினைத்து பெசண்ட் நகர் சர்ச்சுக்கு சென்றுவிட்டு திரும்பினாராம். அந்த சமயத்தில் அங்கிருந்த காவல் துறையினர் ஒரு சந்தேக கேஸில் இவரை பிடித்து சென்றுவிட்டனராம். தான் இயக்குநராக போகிறவர் என்பதை அவருடன் இருந்தவர்களையும் சொல்ல அனுமதிக்கவில்லையாம்.

காவல் நிலையத்துக்கு சென்ற அவர் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்துவிட்டு அங்கிருந்த ஒரு பலகையில் படுத்து தூங்கிவிட்டாராம். அந்த கேப்பில் ஒரு வீட்டில் தேங்காய் திருடியவரை காவல் துறையினர் கைது செய்து அடித்துக்கொண்டிருந்தார்களாம். அப்போதுதான் நம்மை தேங்காய் திருட்டு கேஸில்தான் சந்தேகமாக பிடித்துவந்திருக்கிறார்கள் என்பது எஸ்.ஜே.சூர்யாவுக்கு தெரிந்ததாம். பிறகு திரைத்துறையில் இருக்கும் அவரது நண்பர்களுக்கு எப்படியோ விஷயம் தெரிய; அவர்கள் காவல் துறையினரை தொடர்புகொண்டு விவரத்தை சொல்லிய பிறகு சூர்யா அங்கிருந்து வந்தாராம். இதனை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X