அசல் பட தோல்விக்கு அஜித்தான் காரணமா?.. என்னால் எதுவும் செய்ய முடியல.. சீக்ரெட்டை உடைத்த இயக்குநர் சரண்

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார். விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆனதால் இப்போது குட் பேட் அக்லியில் நடிக்கிறார் அஜித். படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் ஷூட் செய்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அஜித்தின் ஃபேவரைட் இயக்குநரான சரண் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் வைக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யானை பசிக்கு சோள பொறி போன்று விடாமுயற்சியின் ஓடிடி உரிமை குறித்த அப்டேட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டது லைகா நிறுவனம்.

Director Saran Open Talks about Ajith And Asal Movie

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கதைகளை இயக்குவதில் மகிழ் திருமேனி கில்லாடி என்பதால் இதில் என்ன மாதிரியான ஆக்‌ஷனை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். படத்தில் இன்னும் 40 சதவீதம் மட்டுமே ஷூட் செய்ய வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் ஷூட்டிங் தொடங்கவே இல்லை. இதனால் அஜித்தின் ரசிகர்கள் அப்செட்.

அஜித் பாலிசி: அடுத்ததாக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்படி அஜித்தை பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எவ்வளவுதான் பரபரப்பாக, திடீர் திடீரென தகவல்கள் வெளியானாலும் அஜித்தின் பாலிசி என்பது எப்போதும் அமைதி காத்திருப்பதுதான். பத்திரிகையாளர்களை சந்திப்பது, படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்வது என்பதை அறவே விரும்பாதவர்.

ஃபேவரைட்: அஜித்தின் கரியரில் இயக்குநர் சரண் ரொம்பவே முக்கியமானவர். அவர் அஜித்தை வைத்து இயக்கிய காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. ஆனால் அசல் படம் மட்டும் படுதோல்வியை சந்தித்தது. படத்தின் மேக்கிங் ரிச்சாக இருந்தாலும் திரைக்கதை சுத்தமாக எடுபடாததால் அந்தப் படம் படுத்துவிட்டது. படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரித்திருந்தார். அஜித்தின் கெட் அப் படத்தில் அருமையாக இருந்தாலும் படம் ஃப்ளாப்.

சரண் பேட்டி: அந்தப் படத்தில் அஜித்தும் வசனம், திரைக்கதை எழுதுவதில் பங்காற்றியிருந்தார். இந்நிலையில் சரண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "அசல் படத்தின் டைட்டில் கார்டில் அஜித் தனது பெயரை போட சொன்னதற்கு காரணமே எந்த திட்டாக இருந்தாலும் நான் வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னார். மேலும் இந்தப் படத்தில் நான் பஞ்ச் டயலாக் பேசமாட்டேன். படத்தின் பெயருக்கு கீழே Power of Silence என்ற Tagஐ அவர்தான் போட சொன்னார். அந்தப் படத்தில் என்னை கையை கட்டி நீச்சல் அடிக்க சொல்லிவிட்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

முக்கியமாக எங்களது காம்போவில் அசலுக்கு முன்னர் வந்த படங்களை மைண்டில் வைத்து ரசிகர்கள் அந்தப் படத்தை பார்த்தார்கள். அது அவர்களுக்கு திருப்தியை தரவில்லை. இப்போது என்னையும், அஜித்தையும் அந்தப் படத்தில் மறந்துவிட்டு படத்தை பாருங்கள். அது ரொம்பவே நுணுக்கமான திரைப்படம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X