Ajith - சீக்கிரம் படத்தை முடிக்கிறியா இல்லை கெளம்பட்டுமா?.. இயக்குநரிடம் கடுப்படித்த அஜித்
சென்னை: நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். துணிவு படம் ஹிட்டடித்ததால் கண்டிப்பாக இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள். இந்த சூழலில் இயக்குநரிடம் அஜித்குமார் டென்ஷன் ஆன விஷயம் குறித்து தெரியவந்திருக்கிறது.
அஜித்குமார் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். படங்கள் ஹிட்டடித்தாலும், தோல்வியடைந்தாலும் அவருக்கென்ற ரசிகர கூட்டம் அப்படியேத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பேட்டி கொடுப்பது, பங்களின் ப்ரோமோஷனில் கலந்துகொள்வது வெளியில் தலையை எப்போது காண்பிக்கமாட்டார். அவரைப் பார்க்க வேண்டுமென்றால் அவரது படம் ரிலீஸாகும்போதுதான் பார்க்க முடியும்.

விடாமுயற்சி: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனடு 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அதை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. மொத்தம் இரண்டு ஷெட்யூல்கள் இதுவரை நடந்து முடிந்திருக்கின்றன. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்த அஜித்குமார் தற்போது சின்னதாக ஒரு பிரேக் எடுத்திருக்கிறார். துபாயில் அவர் இப்போது தனது குடும்பத்தினரிடம் நேரத்தை செலவிட்டுவருகிறார்.
என்ன கதை: மகிழ் திருமேனி ஆக்ஷன் த்ரில்லர் சப்ஜெக்ட்டை இயக்குவதில் கில்லாடி. அந்த ஜானரில்தான் இந்தப் படமும் உருவாவதாக கூறப்படுகிறது. அதாவது அஜித்தும் திரிஷாவும் படத்தில் கணவன் - மனைவி என்றும் அவர்கள் ஒரு வேலைக்காக வெளிநாடு செல்லும்போது அங்கு திரிஷாவை வில்லன் கும்பல் கடத்திவிடும்; அந்தக் கும்பலிடமிருந்து எப்படி அஜித் தனது மனைவியை காப்பாற்றுகிறார் என்பதுதான் ஒன் லைன் என சொல்லப்படுகிறது. சராசரியான ஒன் லைனாக இருந்தாலும் மகிழ் திருமேனி கண்டிப்பாக திரைக்கதையில் அட்டகாசம் செய்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.
சிட்டிசன் கதை: அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது கரியரில் எத்தனையோ முக்கியமான படங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் சிட்டிசன். சரவண சுப்பையா இயக்கிய அந்தப் படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. சமூகக அக்கறையுள்ள கதையாக அதை அமைத்திருந்தார் சரவண சுப்பையா. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அஜித் பல கெட்டப்புகளில் தோன்றியிருந்தார். இந்த சூழலில் அந்தப் படம் குறித்த சம்பவம் ஒன்றை பார்க்கலாம்.
என்ன நடந்தது?: அதாவது சிட்டிசன் படத்தில் அஜித் கமிட்டாவதற்கு முன்னர் அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்திருந்தன. இருந்தாலும் சிட்டிசன் படத்தில் பொறுமையாகவே நடித்துக்கொடுத்தாராம் அஜித். ஏனெனில் இயக்குநர் சரவண சுப்பையா தனக்கு வேண்டிய நடிப்பை விடாப்பிடியாக வாங்கிக்கொண்டிருந்தாராம். கிட்டத்தட்ட 100 நாட்கள் ஷூட்டிங் நடந்திருக்கிறது.
அஜித்தும் இயக்குநர் சொல்வதை கேட்டு நடித்தாராம். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியான கோர்ட் சீனை ரொம்பவே மெதுவாக எடுத்தாராம். அந்த சமயத்தில் பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு டேட்டை கொடுத்துவிட்டாராம் அஜித். ஆனால் இங்கு க்ளைமேக்ஸ் முடிவது மாதிரி தெரியவில்லையாம். உடனே கடுப்பான அஜித் சரவண சுப்பையாவை அழைத்து, இங்க பாரு சீக்கிரம் முடிச்சுக்கொடுக்கிறியா இல்லை கெளம்பட்டுமா. ஏனா பூவெல்லாம் உன் வாசம் படத்துக்கு தேதி கொடுத்துவிட்டேன்.
அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 மாதங்களாக இதோ வரேன் அதோ வரேன் என சமாளித்திருக்கிறேன் என உச்சக்கட்ட கோபத்தில் கத்திவிட்டாராம். அதன் பிறகுதான் சரவண சுப்பையா விரைவில் எடுத்து முடித்தாராம். அதனை அவரே ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











