காத்திருந்த விஜய்.. தொந்தரவு பண்ணாதீங்க.. நானே கூப்பிடுறேன்.. அஜித் காட்டிய கறார்.. ஓஹோ இது வேறயா?

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

throwback stories ajith vijay

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. மேலும் துபாயில் நடக்கும் கார் ரேஸிலும் அவர் கலந்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி அஜர்பைஜான் நாட்டில் வைத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. அங்கு பெரும்பாலான காட்சிகள் மும்முரமாக படமாக்கப்பட்டன. ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். இதற்கிடையே அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துவருகிறார். ஒரேநேரத்தில் இரண்டு படங்கள் அஜித் நடிப்பது நீண்ட நாட்களுக்கு பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.

சரவண சுப்பையா பேட்டி: இந்நிலையில் அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் சிட்டிசன் படத்தின் இயக்குநர் சரவண சுப்பையா அஜித்துடனான தன் அனுபவம் பற்றி சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசினார். அந்தப் பேட்டியில் அவர், “முதலில் அஜித்திடம் சிட்டிசன் கதையை சொன்னபோது நடந்த சம்பவமே வேறு. அதாவது அவர் முகவரி ஷூட்டிங்கில் இருந்தார். அவரிடம் கதை சொல்லப்போனேன். அவர் என்னிடம் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாருங்கள் என்று கூறினார். நானும் கொஞ்ச நாட்களில் தந்துவிட்டேன். அப்போது அவர் என்னிடம் கதை பிடித்திருந்தால் நானே அழைப்பேன். அதுவரை என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டார்.

விஜய்யிடம் சென்ற சரவண சுப்பையா: ஆனால் அஜித் சில நாட்களாகியும் என்னை அழைக்கவில்லை. அந்த சமயத்தில் விஜய்யிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்தார். அங்கு சென்றுகொண்டிருந்தபோது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தரப்பிலிருந்து ஒருவர் என்னிடம் வந்து உங்களை அஜித் பார்க்க வேண்டும் என்கிறார். உடனே வாருங்கள் என்று அழைத்து சென்றுவிட்டார். அங்கு சென்ற பிறகு அஜித் என்னிடம், கதை அபாரமாக இருக்கிறது. பாதிதான் படித்தேன் இம்ப்ரெஸ் ஆகிவிட்டேன். உடனே இந்தப் படத்தை செய்யலாம். இரண்டு படங்களுக்கு தர வேண்டிய கால்ஷீட்டை இந்தப் படத்துக்கு தருகிறேன். நீங்கள் சென்று சக்கரவர்த்தியை பாருங்கள் என்று சொன்னார். பிறகு சக்கரவர்த்தியை பார்த்து அட்வான்ஸும் வாங்கிவிட்டேன். அந்த சமயத்தில் விஜய்யிடம் கதை சொல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X