வடிவேலுவுடன் நடிப்பதா?.. அய்யய்யோ அதெல்லாம் முடியாது.. பயந்துபோன அந்த நடிகை சொன்னது தெரியுமா?

சென்னை: வடிவேலு தனது சினிமா பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதில் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய மூன்று படங்களில் மாமன்னன் படம் மட்டும்தான் மெகா ஹிட்டானது. அடுத்ததாக மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். மீண்டும் அவர் நடிக்க வந்திருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய சூழலில்; வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை குறித்து தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ் கிரணால் சினிமாவுக்குள் வந்த அவர் தன்னுடைய திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்டு வைகை புயல் என்ற பட்டத்தை பெற்றார். தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைக்கும் வல்லமை அவரிடம் இருந்ததால் வடிவேலுவை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடியது. அதேபோல் தன்னுடைய ஸ்லாங்க் ஸ்டைல், பாடி லாங்குவேஜ், நடை, உடை, பாவனை என அனைத்திலுமே காமெடி சரவெடியை பற்ற வைத்தார்.

throwback stories vadivelu kovai sarala

வடிவேலுவுக்கு பிரச்னை: வைகை புயல் என்ற பட்டத்துக்கு ஏற்றபடியே புயல் வேகத்தில்தான் வடிவேலுவின் வளர்ச்சியும் இருந்தது. அவர் இல்லாமல் ஒரு படம்கூட தமிழில் வெளியாகாது என்ற நிலை உருவானது. வடிவேலுவும் வரும் வாய்ப்புகளில் எல்லாம் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டிக்கொண்டே சென்றார். அப்படிப்பட்ட சூழலில்தான் விஜயகாந்த்தோடு அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அரசியல் மேடை ஏறினார். அந்த மேடை அவரது கரியரின் வேகத்தை கீழே இறக்கிவிட்டது. இதனால் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் வடிவேலு.

throwback stories vadivelu kovai sarala

இரண்டாவது இன்னிங்ஸ்: ஒருவழியாக அவருக்கிருந்த பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதால் அவர் மீண்டும் நடிக்க வந்தார். அப்படி அவர் நடித்த முதல் இரண்டு படங்களான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. அதனைத் தொடர்ந்து நடித்த மாமன்னன் படம் மெகா ஹிட்டானது. இதில் காமெடி ரோல் இல்லாமல் குணச்சித்திர வேடத்தை ஏற்று ஸ்கோர் செய்திருந்தார். அடுத்ததாக அவர் மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

throwback stories vadivelu kovai sarala

வி.சேகர் பேட்டி: இந்நிலையில் இயக்குநர் வி.சேகர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வடிவேலுவின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நான் படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்தபோது கவுண்டமணியும், செந்திலும் தொடர்ந்து என்னுடன் பயணித்தார்கள். அந்த சமயத்தில்தான் வடிவேலு சினிமாவில் நுழைந்தார். மேலும் அப்போதுதான் எனக்கும் அறிமுகமானார். அவர் நடித்த தேவர் மகன் படம் பார்த்துவிட்டு ரொம்பவே ஒல்லியாக இருக்கிறார். நாம் இயக்கும் படத்தில் இவரை நடிக்க வைக்கும்போது இவருக்கு ஒரு நடிகையை ஜோடியாக்க வேண்டும் என்று நினைத்தேன்.

throwback stories vadivelu kovai sarala

மறுத்த சரளா: அப்படித்தான் ஒரு படத்துக்கு அவரை புக் செய்தேன். அப்போது கோவை சரளாவை அணுகி வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கும்படி கேட்டேன். அந்த சமயத்தில் கோவை சரளா கமல் ஹாசனுடன் ஜோடியாக நடித்திருந்தார். அதன் காரணமாக வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தால் என்னுடைய மார்க்கெட் போய்விடும் என்று கூறினார். ஆனால் நான் விடாமல் அவரை சமாதனப்படுத்தி வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தேன். பிறகு இவர்களது ஜோடி இன்றுவரை கொண்டாடப்படுகிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X