கோவை சரளாவுடன் ஒரே ரூமில் வடிவேலு.. எவ்வளவு தட்டியும் திறக்கவில்லை..டென்ஷனாகி துரத்திவிட்ட இயக்குநர்
சென்னை: வடிவேலு இப்போது மாரீசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஃபகத் பாசிலும் நடித்திருக்கிறார். செப்டம்பர் மாதம் படமானது ரிலீஸாகவிருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் செம பிஸியாக அவர் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல இயக்குநரான வி.சேகர் அளித்த நேர்காணலில் வடிவேலு - கோவை சரளா குறித்து பேசியிருக்கிறார்.
வடிவேலுவின் கரியர் உச்சத்தில் சென்றுகொண்டிருந்தபோது விஜயகாந்த்துடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. எனவே விஜயகாந்த்தை காலி செய்ய வேண்டும் என்று நினைத்து அரசியல் கட்சி மேடையில் ஏறி; இஷ்டத்துக்கும் பேசினார். ஆனால் அந்தத் தேர்தலில் வடிவேலு ஆதரவு கொடுத்த அரசியல் கட்சி மண்ணை கவ்வியது. மாறாக விஜயகாந்த் தேர்தலில் வென்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக மாறினார். வடிவேலுவை விஜயகாந்த் பெரிதாக கண்டுகொள்ளாவிட்டாலும்; அவரை திரைத்துறையினர் ஒதுக்க ஆரம்பித்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸ்: சில பிரச்னைகள் அவரை சுற்றிக்கொண்டிருந்த சூழலில்; அத்தனையும் பேசி முடிக்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் அவர் மீண்டும் நடிக்க வந்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்போது ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வி.சேகர் பேட்டி: இரண்டாவது இன்னிங்ஸில் பயங்கர பிஸியாக இருக்கும் வடிவேலு குறித்து இயக்குநர் வி.சேகர் தனியார் யூடியூப் சேனலான லிட்டில் டாக்ஸுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "நான் இயக்கிய ஒரு படத்தில் வடிவேலுவுடன் கோவை சரளாவை ஜோடியாக வைத்து கமிட் செய்தேன். அந்த ஷூட்டிங்கின்போது என்னிடம் வந்த வடிவேலு, எதற்காக எனக்கும் சரளாவுக்கும் தனித்தனி மேக்கப் ரூம் போட வேண்டும்.
ஒரே ரூமாக போடுங்கள்: ஒரே ரூமாக போடுங்கள். உங்களுக்கு செலவு மிச்சமாகும். பட்ஜெட்டும் கட்டுக்குள் இருக்கும் என்று சொன்னார். உடனே நானோ நமக்கு எவ்வளவு நல்லது செய்கிறார் என்று நினைத்தேன். அவர்கள் ஒரே ரூமுக்குள் போனதும் கதவை சாத்திக்கொண்டு திறக்கவே இல்லை. எனது உதவி இயக்குநர் ஒருவர் வந்து, 'சார் அவர்கள் கதவையே திறக்கமாட்டேன் என்கிறார்கள். நீண்ட நேரம் தட்டி பார்த்துவிட்டேன் என கூறினார். எனக்கு டென்ஷன் ஆகி இந்தப் படத்தில் சரளாவுக்கு ஜோடியாக நடிக்க தேவையில்லை என்று சொல்லி துரத்திவிட்டேன்" என்றார்.
ஃபேமஸ் ஜோடி: வடிவேலுவும், கோவை சரளாவும் கோலிவுட்டில் ஃபேமஸான காமெடி ஜோடிகளில் ஒன்றக வலம் வந்தார்கள். அவர்கள் இரண்டு பேரும் இணைந்து வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே என ஏராளமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீண்ட வருடங்கள் கழித்து அவர்கள் இரண்டு பேரும் மாரீசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











