எதுக்காக குஷ்பூவை பற்றி நீ பேசுன?.. மனைவியிடம் சண்டை போட்ட பிரபு.. அன்னை இல்லத்தில் ஏற்பட்ட பூகம்பம்

சென்னை: நடிகர் திலகம் என்று புகழப்படுபவர் சிவாஜி. அவரது இளைய மகனான பிரபுவும் தந்தை வழியில் நடிப்பை தேர்ந்தெடுத்து இளைய திலகம் என்ற பட்டத்தை பெற்றவர். இப்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் அவர்; ஹீரோவாக நடித்தபோது நடிகை குஷ்பூவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில் இயக்குநர் வி.சேகர் பிரபு - குஷ்பூ விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

இந்திய சினிமாவிலேயே சிவாஜிதான் சிறந்த நடிகர் என்று பலராலும் போற்றப்படுபவர். அவரது நடிப்பு காரணமாகவே அவருடைய குடும்பத்தின் மீதும் திரைத்துறையினருக்கு பெரிய மரியாதையும், அன்பும் இருந்தது. தந்தை வழியிலேயே பிரபுவும் நடிகராக அறிமுகமானார். அவர் அறிமுகமானபோது ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு தனது திறமையை வளர்த்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சின்னதம்பி பிரபு: பிரபுவின் திரை வாழ்க்கையில் சின்னதம்பி திரைப்படம்தான் அவரது மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அதில் அவருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். பி.வாசு இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேசமயம் பிரபுவும், குஷ்பூவும் தீவிரமாக காதலித்துவருகிறார்கள் என்ற கிசுகிசுவும் அப்போது ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Director V Shekhar has said that Prabhu fought with his wife over Khushboo
Photo Credit:

எதிர்த்த சிவாஜி?: அதுமட்டுமின்றி அந்த கிசுகிசு ஓடிய சமயத்தில் பிரபுவுக்கு திருமணம் ஆகியிருந்தது. இதுவும் அன்னை இல்லத்துக்குள் (சிவாஜியின் வீடு) பூகம்பத்தை ஏற்படுத்தியது. பிரபுவை அழைத்து சிவாஜி கண்டித்ததாகவும்; ஒருகட்டத்தில் எம்ஜிஆரே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டார் என்ற பேச்சும் நீண்ட வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வி.சேகர் பேட்டி: இந்நிலையில் பிரபல இயக்குநர் வி.சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் சிவாஜியின் தீவிரமான ரசிகர். ஒருமுறை அவர்களது வீட்டில் விருந்து வைத்தார்கள். அதில் நானும் கலந்துகொண்டேன். விஜயகாந்த்தும் வந்திருந்தார். அப்போது பிரபுவிடம் விஜயகாந்த், 'இவரை குடும்ப படங்களை விட்டு வெளியே வாங்க என சொன்னால் கேட்க மறுக்கிறார்' என கூறினார். அதற்கு பிரபுவோ, 'என்னை வைத்து ஒரு படம் செய்யலாம் என இருக்கிறார் என்றார்.

கண்டிஷன் போட்ட பிரபுவின் மனைவி: பிறகு எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். சிவாஜியின் மனைவி வந்து என்னிடம், 'நான் உங்கள் படங்களின் தீவிரமான ரசிகை என சொன்னார். மேலும் பிரபுவின் மனைவி என்னிடம், 'நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி. உங்கள் இயக்கத்தில் பிரபு நடிக்க வேண்டும் என சொன்னதே நான்தான். ஆனால் ஒன்றே ஒன்று; இப்படத்தில் அவருக்கு குஷ்பூ ஜோடியாக வேண்டாம். ஏனென்றால் அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பேசுகிறார்கள்.

சண்டை போட்ட பிரபு: குஷ்பூவை ஜோடியாக போட்டால் என் வாழ்க்கையே போய்விடும் என கூறினார். எனக்கும் அது சரியென்று பட்டது. எனவே அப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக மீனாவை ஃபிக்ஸ் செய்தேன். அதனால் பிரபு கோபித்துக்கொண்டார். அந்தப் படமும் நடக்கவில்லை. அதுமட்டுமின்றி வீட்டுக்கு சென்று அவர் தனது மனைவியிடம், 'ஏன் குஷ்பூவை பற்றி அங்கெல்லாம் பேசுற' என சண்டை போட்டிருக்கிறார். எப்படியோ என்னால் ஒரு குடும்பம் உடையாமல் இருந்ததை நினைத்து சந்தோஷம்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X