Visu: கடைசி மகன்களுக்காக விசு செய்த அட்டகாசம்.. என்னைப் பார்த்தால் பாவமா இல்லையானு மட்டும்தான் கேட்கல?
சென்னை: விசு என்கிற மீனாட்சி சுந்தரம் ராமசாமி எனும் கலைஞன் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தவர். இவர் இயக்கிய படங்களை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்தார்கள். அதற்கு காரணம் அவரது திரைக்கதை நேர்த்தி மற்றும் வசனம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் , தயாரிப்பாளர் என கொடிகட்டிப் பறந்த விசு இயக்கிய படங்களில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று, சம்சாரம் அது மின்சாரம் படம்.இந்த படத்தில் கூட்டுக் குடும்பம் குறித்து நேர்த்தியாக பேசிய படம். இந்த படத்தில் கடைசி மகன் கதாபாத்திரத்தை விசு வடிவமைத்தது குறித்து ட்விட்டர் வாசி, 'Pixelated Pigeon' என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது பதிவில், " பொதுவா கடைசி பையன்னாவே கொஞ்சம் செல்லம்மா தான் வளர்ந்திருப்பாங்க. இதனால் வீட்ல இருக்க மத்த பசங்க, அவங்கள கொஞ்சம் மட்டம் தட்டி தான் பார்ப்பாங்க. அந்த வகைல விசுவோட எவர்கிரீன் ஹிட் படம் சம்சாரம் அது மின்சாரம், அதுல "ஹாஜா ஷெரிஃப்" கடைசி பையனா சிறப்பா நடிச்சிருப்பாரு. அவரோட கதாபாத்திரம் படத்தில் எப்படி பயன்பட்டு இருக்குன்னு பார்க்கலாம். படத்தின் ஆரம்ப காட்சியில் வீட்டில் ஒருத்தனா பொண்ணு பாக்க வந்தவங்க கிட்ட பேசிட்டு இருக்க சீன், காமெடியாக இருந்தாலும், எதார்த்தத்தில் கடைசி பையனை பொன்னு பார்க்க வந்தவங்க கூட "வாடா, உட்கார்ரா" அப்படின்னு தான் பேசுவாங்க. கடைசி பையனான இவனையே எல்லாரும் மட்டம் தட்டுவாங்க, ஆனா இவனே மட்டம் தட்டுற ஆளுனா அது வேலைக்காரியான, மனோரமா தான்.

: ஹிந்தியே தெரியலனலும் பொண்ணுங்கள பார்த்தாலே நம்ம ஆளுங்களுக்கு, எந்த மொழியா இருந்தாலும் பிக்கப் பண்ணிடுவாங்க. அதேபோல இவனுக்கும் ஒரு காதல் ட்ராக் வைத்திருப்பார் விசு. படத்துலயே இது ஒரு முக்கியமான காட்சியா இது இருக்கும், பரீட்சையில் பெயில் ஆகிட்டு அடிவாங்குற சீன், சோகமான சீனா இருந்தாலும் அவனோட லவ்வர் வரும் போது எமோசனலாகவும், காமெடியாகவும் சிறப்பான நடிப்பு.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை: பல குடும்பங்களில் புதிய திருமணமான ஜோடிகளுக்கு இப்படி ஒரு சங்கடம் நடக்கும். இப்போதைய காலகட்டத்தில், ஆனால் 80களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை அப்படியே படம் எடுத்திருக்கிறார் விசு. இதில் வெகுளியான பாரதி கதாபாத்திரமாக, அதிகம் கேள்வி கேட்பது இயல்பான ஒன்று. கிச்சானாலே இளிச்சவாயன் தானே அப்படிங்கிறத போல, கடைசி பையன்னாலே எல்லாரும் அட்வைஸ் தான் பண்ணுவாங்க. அதுவும் சமயம் கிடைக்கும் போதெல்லாம்.

கடைக்குட்டி: வீட்ல ஒரு சண்டைனா கூட, சம்பந்தம் இல்லனா கூட, கடைசி பையன ஏதாவது ஒரு வகைல தொடர்புபடுத்தி, திட்ட ஆரம்பிப்பாங்க. என்ன சொன்னாலும் திட்டு தான் விழும். சில நேரங்களில் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது தோனும், கடைசியா ஒரு வழியா பாஸ் ஆகி சந்தோசமாக இருக்கும் போது, காதலி ஊரை விட்டு போறா. அந்த மகிழ்ச்சியிலும் ஒரு வேதனை. வீட்ல ஏதாவது சமாதானம் பேசும் போது, நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லலாம்னா, அதுலயும் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடிச்சு, நம்ம மூக்கை உடைப்பாங்க. நமக்கும் ஏண்டா சொன்னோமோ, அப்படின்னு இருக்கும்" என பதிவிட்டுள்ளார். இது இவரது இந்த பதிவு ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த பதிவு, பல குடும்பங்களில் இருக்கும் கடைக்குட்டிகளின் மனக்குமுறலை அப்படியே சொல்வது போல உள்ளது என்றும் இணையத்தில் இருக்கும் கடைக்குட்டி சிங்கங்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











