ஷங்கர் ரூட்டை பிடித்த அட்லீ.. 15 வருடங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ்.. எந்த படத்தின் காப்பி தெரியுமா?

சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இநத அறிவிப்பு வெளியானதுமே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற ஒரு எதிர்பார்ப்பும் , இந்தியாவே காத்திருந்த கனவும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பிரம்மாண்டம் என பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் இருந்தார். இன்று அவரது சிஷ்யன் அட்லீ என்பது வியப்பை அளித்துள்ளது. இதில் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை இதில் காணலாம்.

இந்தியன் படம் வெளியான நேரத்தில் கமலை வைத்து எந்திரன் படத்தை இயக்க முயற்சித்தவர் இயக்குநர் ஷங்கர். ஆனால், அப்போது மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. நேரம் வரும் வரை அப்படத்தை இயக்க காத்திருந்தார். அதன் பின்பு பாய்ஸ் படத்தை இயக்கி நஷ்டம் அடைந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், இளைஞர்கள் எப்படியான மனநிலையில் இருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார். பாய்ஸ் படத்திற்கு பிறகு அந்நியன். விக்ரம் கரியரில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம். ரெமோ, அந்நியன், அம்பி என 3 கெட்டப்களில் விக்ரம் அசத்தியிருப்பார். அவரது நடிப்பை பார்த்து இளம் நடிகர்களே மிரண்டு போனார்கள்.

do-you-know-what-director-atlee-and-shankar-have-in-common

இதன் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக ரஜினியுடன் கை கோர்க்கிறார் ஷங்கர். சிவாஜி தி பாஸ் படம் இந்திய அளவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடிக்கிறது. சிவாஜி திரைப்படம் ஷங்கருக்கு ஒரு முன்னோட்டம். மாபெரும் நடிகரை வைத்து மாஸ், கமர்ஷியல் காட்சிகளை தாண்டி வித்தியாசம் காட்ட நினைத்தவர் ஷங்கர். தனது வழக்கமான ஊழல் பார்முலாவில் இருந்து மாறி தமிழ் திரை ரசிகர்களுக்கு புரியாத சைன்ஸ் வகை படம் என்ற பயமும் கூடுதலாய் இருந்திருக்கலாம். இதனால், சிவாஜியை வைத்து ஆழம் பார்த்தவர் ஷங்கர்.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிகருடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்ற தயராகிறார். அப்படம் தான் எந்திரன். தனது வாழ்நாள் கனவு என்றே ஷங்கர் தெரிவித்திருந்தார். எந்திரன் படம் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இன்றைய சூழலில் 100 கோடி என்பது சாதாரண பேச்சு வழக்காக மாறியிருக்கிறது. படத்தின் தொடக்க விழாவே பிரம்மாண்டம் தான்.

do-you-know-what-director-atlee-and-shankar-have-in-common

வரலாற்று வெற்றி: எந்திரன் படத்திற்கு கூடுதல் விளம்பரமே ஐஸ்வர்யா ராய் தான். சூப்பர் ஸ்டார் படத்தில் ஐஸ்வர்யா ராய் என்பதே பேசுபொருளாக மாறியது. பேரழகி என்றால் அவர்தான் என சினிமா ரசிகர்கள் பேசினர். இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், சன்பிக்சர்ஸ் இந்த மிகப்பெரிய காம்போ மீண்டும் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஆனால், இப்படி ஒரு கூட்டணியில் வரலாற்றை புரட்டி போட்ட படம் தான் எந்திரன். இப்படம் இந்திய அளவில் பெரிய வரலாற்றில் தடம் பதித்தது. பாலிவுட் திரையுலகத்தையே தென்னிந்திய பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் ஷங்கர். ரஜினியின் நடிப்பு பிரம்மிக்க வைத்தன. எந்திரன் படத்தில் எல்லோரும் வாயை பிளந்து பேசும் காட்சிகள் க்ளைமாக்ஸ் தான். இப்படத்தை சைன்ஸ் பிக்சனாக எளிய திரை ரசிகருக்கும் புரியும் படி எடுத்திருப்பார் ஷங்கர். இதுதான் அவரது வெற்றி என்று பலரும் கூறுவார்கள்.

அட்லீயின் அடுத்த இன்னிங்ஸ்: அன்று ஷங்கர் தொட்ட கனவை இன்று அவரது சிஷ்யன் அட்லீ தொடங்கியிருக்கிறார். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் இயக்கும் இரண்டு கனவு படங்களையும் தயாரிப்பது சன் பிக்சர்ஸ் தான். சன் பிக்சர்ஸ் ஜெயிலர், கூலி, ஜெய்லர் 2 படங்களை தயாரித்து வருகிறது. இந்த படங்களின் பட்ஜெட்டை காட்டிலும் அட்லீ இயக்கும் படத்திற்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ தனது 6ஆவது படத்தை இயக்க இருக்கிறார். விஜய் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அல்லு அர்ஜூனுடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவே பிரம்மிக்கும் வகையில் அவதார் ரேஞ்சிற்கு படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

do-you-know-what-director-atlee-and-shankar-have-in-common

குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்: இயக்குநர் அட்லீயின் குருவான ஷங்கர் இந்தியாவை பிரம்மிக்க வைத்தார். அட்லீ உலகையே பிரம்மிக்கும் வகையில் சைன்ஸ் பிக்சன் படத்தை இயக்க இருக்கிறார். பட அறிவிப்பு வெளியான இன்று வெளியான வீடியோவில் அட்லீ கூறிய கதையை கேட்டு பிரம்மிக்க வைப்பதாக தெரிவித்துள்ளனர். ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ஷங்கர் தான் இயக்கும் படத்தில் படத்தின் காட்சிகளை விட பாடல்களில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். அதேபோன்று அதில் ஒரு வித்தியாசம் காட்டுவார். குருவை மிஞ்சிய சிஷ்யனாக வளர்ந்திருக்கும் அட்லீ பாலிவுட்டையே கலங்கடித்தார். இப்போது இந்தியாவை தாண்டி செல்வாரா என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இசையமைப்பாளர் இவரா?: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் யார் இசையமைப்பாளர் என்ற கேள்விதான் பலரையும் தூங்கவிடாமல் செய்துள்ளது. கட்சி சேர ஆல்பம் பாடல் மூலம் பிரபலம் அடைந்த சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளர் என கூறப்பட்டாலும் இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஷங்கருக்கு ஏ.ஆர்.ரஹ்மானை போன்று சாய் அபயங்கரும் இருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

do-you-know-what-director-atlee-and-shankar-have-in-common

அவெஞ்சர்ஸ் - என்ட் கேம், கேப்டன் மார்வெல்' போன்ற திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட Lola VFX நிறுவனத்தில் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை தொடங்கியுள்ளனர்.அல்லு அர்ஜூன் படத்தை அட்லீ இயக்க போவதாக செய்திகள் வெளிவந்த போதும் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்தி வந்தார் அட்லீ. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாலும் அதில் ஒரு குட்டிக்கதையை சொல்லும் அட்லீ இதிலும் அதைபோன்ற மேஜிக்கை இப்படத்திலும் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

எந்த படத்தின் காபி?: இயக்குநர் அட்லீ இயக்கும் படங்களை ரசிகர்கள் ரோஸ்ட் செய்வது அதிகம். குறிப்பாக சினிமா விமர்சகர்களும் அவரது படத்தை இது தமிழ் படத்தில் இருந்து வந்த காபி என்றும் கூறுவார்கள். இவர் ஒரு படத்தில் இருந்து எடுத்தால் காபி என்று கூறலாம். ஒவ்வொரு படத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியை எடுத்து வைத்தால் திருட்டு என்று சொல்ல முடியுமா என ரசிகர்கள் கலாய்ப்பார்கள். இந்நிலையில், ஒரு வேளை அவெஞ்சர்ஸ் படத்தை காபி அடித்து அதன் கதையை மாற்றி சொல்லியிருப்பார் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். அல்லு அர்ஜூன் நடித்த படத்தையே திருப்பி எடுத்தாலும் எடுப்பார் என்றும் கிசுகிசுக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X