Rajini: ஓட்டலில் நடந்த தாக்குதல்.. லதாவை ரகசிய திருமணம் செய்த ரஜினி..காந்தராஜ் சொன்ன தகவல்!
சென்னை: ஸ்டைல் ஸ்டைல் தான் இதுசூப்பர் ஸ்டைல் தான் என இன்றைய தலைமுறையினரும் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஜெயிலர் படத்திற்கு பின் இளவட்டங்களும் ரஜினியின் தீவிர ரசிகராகிவிட்டனர். 73வயதிலும் வேட்டையன், கூலி என அடுத்தடுத்த படங்களை கையில் வைத்துள்ளார்.இதில் வேட்டையன் படம் வரும் 10ந் தேதி வெளியாக உள்ளது.
நடிப்பு மற்றும் ஸ்டைலால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவரது இதயத்தை வென்றவர் தான் மனைவி லதா ரஜினிகாந்த். 1981ம்ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

காந்தராஜ் பேட்டி: மருத்துவர் காந்தராஜ் சினிமா தொடர்பான பல விஷயத்தை பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ரஜினி, லதா திருமணம் குறித்து Rednool youtube சேனலுக்கு பேசி உள்ளார். அதில், ரஜினி, லதா என்ற நடிகையை காதலித்தார். இது எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை என்பதால், அது மிகப்பெரிய பிரச்சனையாகி, அவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவிற்கு பிரச்சனை வந்தது. இதையடுத்து, கோயபுத்தூரில் ஒரு ஓட்டலில் கடுமையாக ரஜினி தாக்கப்பட்டார். இதில், நான் உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலைமைக்கு ரஜினி வந்துவிட்டார்.
தப்பித்தார் ரஜினி: இதையடுத்து மன உளைச்சலில் இருந்த ரஜினி, பத்திரிக்கையாளரிடம் கோவமாக பேசினார். இதனால், அவருக்கு படவாய்ப்பு எல்லாமே பறிபோனது. கடைசியில் ரஜினியின் குருநாதர் கே பாலசந்தர், மேஜர் சுந்தர்ராஜன் போன்றவர்கள் அவருக்கு கொடுத்த ஐடியாவால் அதில் இருந்து தப்பினார். தன்னைப்பார்த்து ரஜினி பயந்துவிட்டார் என்று தெரிந்ததும் எம்ஜிஆர் ரஜினியை விட்டுவிட்டார். ரஜினி சந்தித்த மிகப்பெரிய பிரச்சனையே அது தான்.
ரகசிய திருமணம்: இந்த காதலில் அடிபட்ட ரஜினிகாந்த், அந்த நடிகை போல வெள்ளையாக இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போது தான், லதா ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வந்தார். லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தார். கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினிகாந்தை நேர்காணல் செய்யவேண்டி இருந்தது. அதற்காக ஒரு படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டாரை முதல் முதலில் சந்தித்தார். அப்போது தான் ரஜினிக்கு லதா மீது ஒரு அபிப்ராயம் வந்துள்ளது.
அவர் ஒய்ஜி மகேந்திரனின் மைத்துனி இதையடுத்துத்தான் இருவரின் திருமணமும் நடைபெற்றது. அந்த திருமணத்தையும் யாருக்கும் சொல்லாமல் மிகவும் எளிமையாக ரகசியமாக திருப்பதியில் நடத்தினார். இவர்களின் திருமண விஷயம் தினத்தந்தி பத்திரிக்கையில் மட்டும் தான் செய்தியாக வந்தது என காந்தராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











