வரதட்சணை வழக்கு.. மனைவியால் பிரசாந்த் குடும்பமே உள்ளே போக பார்த்தாங்க.. இவ்வளவு பிரச்னை நடந்ததா?
சென்னை: டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடுப்படும் பிரசாந்த் ஒருகாலத்தில் அஜித், விஜய்யைவிடவும் டாப் ஹீரோவாக இருந்தவர். பல இயக்குநர்களுடன் பணிபுரிந்து ஹிட் படங்களை கொடுத்த அவர்; தனது பெர்சனல் வாழ்க்கையில் சில பிரச்னைகளை சந்தித்தார். அதன் காரணமாக அவரால் திரைத்துறையில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் அவர் குறித்து பிரபல சபிதா ஜோசப் பேசியிருக்கிறார்.
பிரசாந்த் கோலிவுட்டில் ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர். தந்தையின் துணை இருந்தாலும் தனக்கான அத்தனை திறமைகளையும் அவர் வளர்த்துக்கொண்டார். சினிமாவில் பல விஷயங்களை கற்ற ஹீரோ என்று அப்போதைக்கு பெயர் எடுத்தவர் அவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து கலக்கியவர். அதனால் டாப் ஸ்டார் என்று அவருக்கு பட்டமும் கிடைத்தது.
விஜய், அஜித்தைவிடவும்: இப்போதைக்கு டாப்பில் இருக்கும் ஹீரோக்களான விஜய், அஜித் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் பிரசாந்த் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருந்தார். குறுகிய காலத்திலேயே பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்தப் படங்கள் அவரது கரியரில் முக்கியத்துவம் வாய்ந்தைவயாக இன்றளவும் இருக்கின்றன.

சரிந்த மார்க்கெட்: கண்டிப்பாக பிரசாந்த் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதற்கு அவரது பெர்சனல் வாழ்க்கையில் நடந்த பிரச்னைதான் காரணம். அவருக்கும் அவர் திருமணம் செய்திருந்த கிரகலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்தப் பிரச்னையால் சினிமாவில் அவரால் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை.
விவாகரத்து: ஏகப்பட்ட பிரச்னைகள் அந்த சமயத்தில் நடந்தன. காவல் துறைவரைகூட அந்த சம்பவம் போனது. ஒருகட்டத்தில் இரண்டு பேரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய்யுடன் GOAT படத்தில் நடித்த அவர்; அந்தகன் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருக்கிறார்.
சபிதாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்பதாக அவரது முன்னாள் மனைவி புகார் அளித்தார். அந்த பெண்ணின் உறவினர்கள் கொஞ்சம் ஹை லெவலில் இருக்கிறார்கள். எனவே அவர்களது துணையும் இருந்தது. ஆனால் நாங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் கேட்கவில்லை என்பதை நிரூபிக்க பிரசாந்த் குடும்பம் திணறிவிட்டது. ஒருகட்டத்தில் உள்ளே போக வேண்டியதாகிவிட்டது. எப்படியோ தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை; அந்தப் பெண்தான் ஏமாற்றுகிறார் என்பதை நிரூபித்து அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











