Rajini and Ajith - அஜித் நடித்த படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த் ... இது வேற நடந்திருக்கா?
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) அஜித் நடித்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

துணிவு படத்தில் அஜித் கடைசியாக நடித்தார். வங்கிக்கொள்ளையையும், வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் அடிப்படையாக வைத்து கமர்ஷியலாக பேசியிருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்றது. வசூலும் 300 கோடி ரூபாயை தாண்டியதாக படத்தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. துணிவு படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். லைகா தயாரிப்பில் முதலில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது.
விடாமுயற்சி: ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாம் பாதியில் தயாரிப்பு நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லாததால் விக்னேஷ் சிவன் வெளியேறி மகிழ் திருமேனி உள்ளே வந்தார். தடம், தடையறத்தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் என்பதால் அஜித்துடன் இணையும் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தொடங்கிய ஷூட்டிங்?: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த சூழலில் அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்தது. அதே வைபை கண்டிப்பாக விடாமுயற்சியிலும் அஜித் தக்க வைத்து சூப்பர் ஹிட் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தொடர் தோல்விகள்: இதற்கிடையே அஜித் அளவுக்கு தமிழ் சினிமாவில் தோல்வி படங்கள் கொடுத்தவரில்லை என்ற முத்திரையும் அவருக்கு இருக்கிறது. ஒருகட்டத்தில் ஜி, ஆஞ்சநேயா, ஆழ்வார் என வரிசையாக தோல்விகளை கொடுத்தார். இருந்தாலும் அவருக்கு அவரது ரசிகர்கள் பக்கபலமாக இருந்தனர். அஜித் கொடுத்த தோல்வி படங்களிலேயே ஜி படம் படுதோல்வியை சந்தித்தது.
ஜி: அந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். ரன் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அவர் இயக்கிய படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில் ஜி படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.

என்ன நடந்தது: அதாவது ஜி படத்தை எடுக்கும் முன்பு ரஜினியிடம் ஒன்லைனை சொல்லியிருக்கிறார் லிங்குசாமி. அது ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக இதனை தனக்கு ஏற்றவாறு மாற்றங்கள் என கூறினாராம். அதற்கு லிங்குசாமியோ இந்தக் கதைக்கு நீங்கள் செட் ஆகமாட்டீர்கள் சார். உங்களை முத்து, படையப்பா மாதிரியான கதையில் நடிக்க வைப்பேன் என கூறிவிட்டு வந்துவிட்டாராம். இந்தத் தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











