அப்பா விஜயகுமார் வசிக்கும் தெரு.. வீம்புக்கென்று வனிதா செய்தது என்ன தெரியுமா?

சென்னை: வனிதா விஜயகுமார் இயக்கத்தில் கடந்த 11ஆம் தேதி வெளியான Mrs&Mr திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஓடிடி நிறுவனங்களும் அந்தப் படத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால்; தனது யூடியூப் சேனலிலேயே படத்தை வெளியிட்டிருக்கிறார் வனிதா. அதிலும் பெரிய ரெஸ்பான்ஸை பெறவில்லை. இதன் காரணமாக அவரும், அவரது மகள் ஜோவிகாவும் அப்செட்டாகியிருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

விஜயகுமாரின் மகளான வனிதா தனது தந்தை மற்றும் குடும்பத்துடன் கடந்த சில வருடங்களாகவே பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார். அவர்களை சேர்த்துவைக்க ரஜினிகாந்த் முதற்கொண்டு பலர் திரைத்துறையில் முயற்சி செய்ததாகவும்; ஆனால் விஜயகுமாரோ வனிதா மீது ஆறாத கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க மொத்தம் மூன்று முறை திருமணம் செய்து அதிலிருந்து வெளியேயும் வந்திருக்கிறார் வனிதா.

இயக்குநர் அவதாரம்: சூழல் இப்படி இருக்க இப்போது அவர் Mrs&Mr என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தில் ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, கிரண் என பலர் நடித்திருந்தார்கள். ஜோவிகாதான் படத்தை தயாரித்திருந்தார். பல இடங்களில் கடன் வாங்கித்தான் இந்தப் படத்தின் தயாரிப்பு செலவுகளை வனிதா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எப்படியாவது வெற்றி பெற்று லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார்.

Fathima Babu Shares Unknown Side of Vanitha Vijayakumar
Photo Credit:

பலத்த அடி; பெரிய சேதாரம்: கடந்த 11ஆம் தேதி இப்படமானது ரிலீஸானது. வனிதா எதிர்பார்த்தபடி படத்தின் ரிசல்ட் அமையவில்லை. படம் படுதோல்வியையும், கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தது. தியேட்டரில்தான் அடி வாங்கியது ஓடிடியிலாவது கல்லா கட்டலாம் என்று எதிர்பார்த்த இயக்குநருக்கு; மேலும் ஒரு அடியாக எந்த ஓடிடி நிறுவனம் இப்படத்தை கண்டுகொள்ளக்கூடவில்லை. இதன் காரணமாக வனிதா தரப்புக்கு மிகப்பெரிய சேதாரம் ஏற்பட்டிருப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். ஓடிடியில் ரிலீஸாகாத படத்தை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார் அவர்.

இளையராஜாவுடன் பஞ்சயாத்து: இதற்கிடையே இப்படம் கிளப்பிய சர்ச்சைகளில் பெரிதான ஒன்று என்றால் அது இளையராஜா இசையமைத்திருந்த சிவராத்திரி பாடலை பயன்படுத்தியதுதான். அதற்கு எதிராக ராஜா கோர்ட்டுக்கு செல்ல; வனிதாவோ தனது இஷ்டத்துக்கு செய்தியாளர்களிடம் பேசிவைத்தார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பட ரிலீஸின்போது அவர் செய்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

என்ன செய்தார்?: அதாவது வனிதாவின் தந்தையும் நடிகருமான விஜயகுமார் வசிக்கும் தெருவில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு பிளான் செய்திருக்கிறார்கள். அப்போது தனது தந்தையிடம் தான் எப்படி வந்திருக்கிறேன் பார் என்று சொல்வது போன்று மற்ற தெருக்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களைவிடவும் அந்தத் தெருவில் அதிக போஸ்டர்களை ஒட்ட சொன்னாராம் வனிதா. இதனை ஃபாத்திமா பாபு பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X