தீனா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபைட்டர் மீது அன்பை கொட்டிய அஜித் - குட்டி ப்ளாஷ்பேக்
சென்னை: தீனா படத்தின் ஷூட்டிங்கில் ஃபைட் மாஸ்டர் சம்பத் ராம் மீது அஜித் அன்பை கொட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித் ஆரம்பகாலத்தில் ஒரு ஹிட்டுக்காக ஏங்கி இருந்தவர். அவரது ஏக்கத்தை தீர்க்கும் விதமாக வசந்த் இயக்கிய ஆசை படம் பெரும் ஹிட்டானது. இதனையடுத்து அஜித் நடித்த காதல் மன்னன், காதல் கோட்டை, வாலி உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின.

கமர்ஷியல் ஹீரோவாக அஜித்குமார்
தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் ஹிட்டாகி அவரை முன்னணி கதாநாயகர்கள் வரிசைக்கு கொண்டுபோனாலும் பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாற முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அஜித். அவர் நடித்த அமர்க்களம் படம் ஹிட்டாகி ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுக்கொடுத்தாலும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுக்கக்கூடிய படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் அஜித்.

மாஸ் ஹிட்டான தீனா திரைப்படம்
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.ஆர். முருகதாஸ் தீனா கதையோடு அஜித்தை அணுகினார். கதை பிடித்துப்போக அஜித்தும் படத்தில் கமிட்டானார். அஜித்தின் இண்ட்ரோ சீனிலிருந்து படம் முழுவதும் அவரை பக்கா மாஸாகவும், கமர்ஷியலாகவும் ஏ.ஆர். முருகதாஸ் காட்சிப்படுத்த படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்திலிருந்துதான் அஜித்திற்கு தல என்ற பட்டம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அன்பை கொட்டிய அஜித்குமார்
இந்நிலையில் ஃபைட்டராகவும், கேரக்டர் ரோலிலும் நடித்துவரும் சம்பத்ராம் அஜித் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இவர் தீனா படத்திலும் அஜித்துடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பேட்டியில் அஜித் குறித்து பேசிய அவர், "தீனா படத்திற்கான வாய்ப்பு வந்தபோது எனக்கு ஸ்டண்ட் தெரியும் என பொய் சொல்லி சண்டைக் காட்சியில் அவருடன் நடித்தேன்.

சம்பத்துக்கு தலையில் பட்ட அடி
அப்போது மழை அதிகமாக பெய்ததால் அந்த ஃபைட்டில் நான் கீழே விழுந்து என் தலை வேகமாக தரையில் மோதிவிட்டது. அந்த சத்தத்தை கேட்டு அஜித் ரொம்பவும் பதறிவிட்டார். உடனே ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு என்னிடம் வந்து தலையில் ஏதாவது அடிப்பட்டுவிட்டதா என்று அக்கறையோடு விசாரித்தார். கூடிய சீக்கிரமே சண்டையை பழகிக்கொள்ளுங்கள். அது நமக்கும் நல்லது எதிராளிக்கும் நல்லது.

சம்பத்துக்கு அஜித் செய்த அட்வைஸ்
அடிபடாமல் சண்டை போட்டு பழகிக்கொண்டால் நம்ம பண்ணும் வேலைக்கு ரொம்பவே நல்லது என அறிவுரையும் கூறினார். அதன் பிறகு நான் ஓரளவு ஸ்டண்ட்டை பழகிக்கொண்டேன். அவருடன் கடைசியாக விஸ்வாசம் படத்தில் நடித்தபொது அதே அன்போடும் அக்கறையோடும் எனது குடும்பத்தை பற்றி நன்றாக விசாரித்தார். அது அப்போது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. அவருடன் ஆஞ்சநேயா, ஜனா, ஆழ்வார், என்னை அறிந்தால் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். அஜித் இப்போதும் என்னிடம் நன்றாக பழகுவது எனக்கு மகிழ்ச்சிதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











