ரச்சிதாவுக்கு Fire விடும் ஃபேன்ஸ்.. எனக்கு தோன்றினால் பண்ணுவேனு ஓபனா சொல்லிட்டாங்க.. செம கெத்து
சென்னை: ரச்சிதா நடிப்பில் Fire திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது. முக்கியமாக இன்று சென்னையில் இருக்கும் சில திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோர் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தை ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் ரச்சிதா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட நாடகங்களில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. முக்கியமாக அவரது எக்ஸ்பிரெஷன், நடிப்பினை பார்த்து அவரை சின்னத்திரை சாவித்திரி என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் அழைப்பார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாட்டு குடும்பங்களுக்குள் எளிதாக சென்று சேர்ந்திருக்கிறார் அவர். சின்னத்திரையில் பிஸியாக இருந்த அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் மாஸ்டருடன்: அந்த சீசனில் அவரால் டைட்டில் வெல்ல முடியாவிட்டாலும் வீட்டுக்குள் இருந்தவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாகவே இருந்தார். முக்கியமாக ராபர்ட் மாஸ்டருடன் அவர் பழகிய விதம் சர்ச்சைகளையும் விவாதத்தையும் கிளப்பியது. ஆனால் தவறான நோக்கத்தில் அவருடன் அப்படி பழகவில்லை என்று பின்னர் விளக்கமளித்தார் ரச்சிதா. இதற்கிடையே சின்னத்திரை நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர். ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.
சினிமா வாய்ப்புகள்: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஏற்கனவே அவர் உப்பு கருவாடு உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பிக்பாஸுக்குப் பிறகுதான் சரளமாக சான்ஸுகள் கிடைத்தன. அந்தவகையில் அவர் ஃபயர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் ஹீரோவாக பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். பாலாஜி, ரச்சிதா தவிர்த்து சாக்ஷி அகர்வால், சாந்தினி உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். ஜேஎஸ்கே சதீஷ்குமார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
ஓரளவுக்கு ரெஸ்பான்ஸ்: ஃபயர் படமானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ரிலீஸுக்கு முன்பு வெளியான மெது மெதுவாய் பாடலில் ரச்சிதாவின் கிளாமரை பார்த்து படத்துக்கு ரசிகர்களிடையே ஹைப் ஏறியிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை ஓரளவுக்கு கொடுத்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியிருந்தாலும்; ஆபாச காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கிறது என்று விமர்சிக்கவும் அவர்கள் தவறவில்லை.
ரச்சிதா பேட்டி: இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த அந்தப் பேட்டியில் தொகுப்பாளரிடம், "நான் இப்போது உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்களை பார்ப்பதை கட் செய்து ஸ்லோமோஷனில் போட்டால் உங்களை நான் ரொமான்ட்டிக்காக பார்ப்பது போல் இருக்கும். அப்படி போடவில்லை என்றால் சாதாரணமாக பார்ப்பது போல் இருக்கும். மற்றவர்கள் பார்க்கும் விதத்தில்தான் எல்லாமே இருக்கிறது. இப்போது நீங்கள் பேசுவதற்கு நான் ரியாக்ட் செய்வது என்பது எனக்கு அந்த இடத்தில் தோன்றியதை செய்திருப்பேன். இதில் என்ன இருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அதிகம் ஃபயர் விட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











