Fire ரச்சிதா ஃபயராத்தான் இருக்காங்க.. பெயர் கெடும் அளவுக்கு என்ன இருக்கு?.. ஓபனா கேக்குறாங்களே!

சென்னை: சீரியலில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ஃபேமஸ் ஆன ரச்சிதா தற்போது Fire என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிப்ரவரி 14ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு படத்திலிருந்து மெது மெதுவாய் என்ற பாடல் வெளியானது. அதில் ரச்சிதா உச்சக்கட்ட கிளாமரை காண்பித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களோ ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். இந்தச் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கன்னட மொழி சின்னத்திரை உலகில் அறிமுகமான ரச்சிதா; தமிழில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் வெகு பிரபலமடைந்தார். அதில் அவரது நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அந்த சீரியலுக்கு பல சீரியல்களில் நடித்த அவருக்கு தமிழ்நாடு முழுவதும் இருக்கும் குடும்பங்களிலிருந்து ஒருவராவது ரசிகராக மாறினார்கள். அதன் காரணமாக இன்னும் சில வருடங்களில் ரச்சிதா மகாலட்சுமியின் வளர்ச்சி கண்டிப்பாக அபரிமிதமாக இருக்கும் என்று பலர் கணித்தார்கள்.

throwback stories fire rachitha mahalakshmi

பிக்பாஸ் ரச்சிதா: அதன்படி அவர் ராதாமோகன் இயக்கிய உப்பு கருவாடு படத்திலும் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த திருப்புமுனை திரையுலகில் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார். அங்கு அவர் தனது திறமையை காண்பித்து விளையாடினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. அதேசமயம் அவருடன் போட்டியாளராக கலந்துகொண்ட ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் பழகிய விதம் அவர்கள் இருவரையும் கொஞ்ச காலம் டாக் ஆஃப் தி ஹவுஸாக வைத்திருந்தது.

பட வாய்ப்பு: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரச்சிதா மகாலட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி எக்ஸ்ட்ரீம், Fire போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் Fire படத்தில் பிக்பாஸில் கலந்துகொண்டு புகழடைந்த பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் ரச்சிதா தவிர்த்து சாக்‌ஷி அகர்வால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்க ஜேஎஸ்கே சதீஷ்குமார் படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். பிப்ரவரி 14ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.

மெது மெதுவாய்: படத்திலிருந்து மெது மெதுவாய் என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் பாடல் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரச்சிதாதான் ஹாட் டாபிக்காக இருக்கிறார். ஏனெனில் அப்பாடலில் அவர் உச்சக்கட்ட கவர்ச்சியை காண்பித்திருக்கிறார். கவர்ச்சி மட்டுமின்றி சில நடன மூவ்மென்ட்டுகளும் ஆபாசமாக இருக்கிறது என்ற கருத்துக்களும் பலமாக எழ ஆரம்பித்திருக்கின்றன. ஒருதரப்பினர் அந்தப் பாடலை ரசித்தாலும் இன்னொரு தரப்பினர் ரச்சிதாவுக்கு கண்டனத்தையும் தெரிவித்துவருகிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ரச்சிதா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. பிக்பாஸில் அவர் கலந்துகொண்ட சமயத்தில் கொடுத்திருந்த பேட்டியில், "சீரியல் நடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு முடிவெடுத்தேன். அப்போது ஒருவர் என்னிடம் வந்து உங்கள் பெயர் கெட்டுப்போய்விடும் என்று சொன்னார். அதற்கு நான், உண்மையாகவா பெயர் கெட்டுப்போகும் அளவுக்கு நான் அப்படி என்ன அங்கு போய் செய்யப்போகிறேன் என்று கேட்டேன்.

அந்த சமயத்தில்தான் நான் இருந்த சேனலில் எங்கள் சீரியலுக்கு பின் குஷ்பூ நடித்த மீரா உள்ளிட்ட சீரியல்கள் எல்லாம் வந்துகொண்டிருந்தன. அப்போது என்னிடம் சொன்னவரிடம், என்னிடம் இப்படி சொல்கிறீர்கள். குஷ்பூவிடம் என்ன சொல்வீர்கள் என்று கேட்டுவிட்டு; இப்படி சொல்லாதீர்கள் தப்பாயிடும்ல என்று கூறினேன். உடனே அவர், இல்லை ம்மா சொல்லணும்னு தோனுச்சு நீங்கள் பண்ணுங்க ம்மா என்று அதற்கு பிறகு சொன்னார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X