கங்கை அமரனுக்கு சரக்கு ஊத்தி கொடுத்த மகன்கள்.. வெங்கட் பிரபு, பிரேம்ஜி செய்த கூத்து.. சூப்பர் மகன்கள்
சென்னை: கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். அவரது இரண்டு மகன்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் சினிமாவில் வெற்றிகரமாக உலா வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மகன்கள் பற்றி கங்கை அமரன் பேசிய விஷயம் சோஷியல் மீடியாக்களில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன்; தனது அண்ணன் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானபோது பாடலாசிரியராக உள்ளே வந்தார். ஏராளமான ஹிட் பாடல்களை எழுதிய அவர் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். அவர் இசையமைத்த மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, சின்ன தம்பி பெரிய தம்பி ஆகிய படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கங்கை அமரன்: அதேபோல் கோழி கூவுது படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறினார். அந்தப் படம் சுமார் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் வரிசையாக படங்கள் இயக்கினாலும் பெரிய வெற்றி கிடைக்காமல் இருந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் கரகாட்டக்காரன் படத்தை இயக்கினார். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இன்றுவரை அந்தப் படம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

நடிகர் கங்கை அமரன்: பாடலாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்த கங்கை அமரன் இத்தனை வருடங்கள் முழு நேர நடிகராக மாறாமல் இருந்தார். இப்போது லெனின் பாண்டியன் என்ற படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். ரோஜாவும் முக்கிய கேரக்டரை அந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கின்றன. நடிகராகவும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
மகன்கள் சினிமாவில்: இதற்கிடையே கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் கூட சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்குநராகவும், பிரேம்ஜி வெற்றிகரமானா நடிகராகவும் ஜொலிக்கிறார்கள். தந்தை போன்றே இரண்டு மகன்களும் செம ஜாலியாக இருப்பவர்கள். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கங்கை அமரன் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாக்களில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
கங்கை அமரன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஒருமுறை நான் ரஷ்யாவுக்கு சென்று வந்தபோது அங்கிருந்து வோட்காவை கொடுத்துவிட்டார்கள். நான் இங்கே வந்து வெங்கட் பிரபுவிடம், என்ன இது ஏதோ வோட்கானு சொல்றாங்க. தண்ணி மாதிரி இருக்கு என சொன்னேன். உடனே அவனோ லெமன் சேர்த்து சாப்பிடு டாடி என சொன்னார். பிறகு அவர்களே லிம்காவை கொண்டு வந்து கலந்து கொடுத்தார்கள். நான் அதை குடித்தேன். தூரமாக அமர்ந்து மகன்கள் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். குடித்துவிட்டு என்னால் எழவே முடியவில்லை. அடுத்த நாள்தான் எழுந்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











