Gautham Menon: ஊரே கொண்டாடிய வேட்டையாடு விளையாடு பாடல்கள்... கெளதம் மேனன் என்ன பண்ணார்ன்னு தெரியுமா?
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
கமல்ஹாசனுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் 2006ல் வெளியானது.
ஹரிஸ் ஜெயராஜ் இசையில் வேட்டையாடு விளையாடு படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.
ஆனால், வேட்டையாடு விளையாடு பாடல்களுக்கு கெளதம் மேனன் கொடுத்த ரியாக்ஷன், ஹாரிஸ் ஜெயராஜ்ஜுக்கே ஷாக்கிங்காக அமைந்துள்ளது.

கெளதம் மேனன் ரியாக்ஷன்: கமல் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன் - கெளதம் மேனன் கூட்டணி முதன்முறை இணைந்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்திருந்தனர். கெளதம் மேனனின் ஆல்டைம் பேவரைட் மியூசிக் கம்போஸர் ஹாரிஸ் ஜெயராஜ், வேட்டையாடு விளையாடு படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமல் போலீஸ் கெட்டப்பில் நடித்த வேட்டையாடு விளையாடு, அவரது ரசிகர்களுக்கு தரமான ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது. முழுக்க முழுக்க போலீஸ் ஆக்ஷன் ஸ்டோரியாக உருவான இந்தப் படத்தில் கமல்ஹாசனும் மாஸ் காட்டியிருப்பார். அதேபோல், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. பார்த்த முதல் நாளே, வெண்ணிலாவே வெள்ளி வெள்ளி நிலவே, நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர்.
வேட்டையாடு விளையாடு பாடல்கள் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. ஆனால், ஊரே வேட்டையாடு விளையாடு பாடல்களை கொண்டாடிய தருணத்தில் கெளதம் மேனன், இன்னொரு படத்தின் பாடல்களை தான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தாராம். இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறிய கெளதம், வேட்டையாடு விளையாடு படத்தில் பலருக்கும் 'பார்த்த முதல் நாளே' பாடல் தான் பிடித்திருந்தது. ஆனால், தனது ஃபேவரைட் 'வெண்ணிலாவே வெள்ளி வெள்ளி நிலவே' பாடல் தான் என்றிருந்தார்.
அதைவிட முக்கியமாக வேட்டையாடு விளையாடு பாடல்களை விடவும், அதேநேரம் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான சில்லுன்னு ஒரு காதல் ஆல்பம் தான் கெளதம் மேனனுக்கு ரொம்பவே பிடித்திருந்ததாம். அதிலும் ஏஆர் ரஹ்மான் பாடியிருந்த 'நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்' பாடலில் கெளதம் மேனன் உருகியேவிட்டாராம். இதுகுறித்து ஹாரிஸ் ஜெயராஜ்ஜிடமே கெளதம் மேனன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மின்னலே படத்தில் இருந்தே ஏஆர் ரஹ்மானுடன் தான் பணிபுரிய வேண்டும் என தீவிர ஆசையில் இருந்துள்ளார் கெளதம் மேனன். சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா கெளதமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தனது குருவின் நினைவாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஹீரோ சூர்யாவின் பெயரையும் கெளதம் என்றே வைத்திருந்தார் கிருஷ்ணா. இப்படி சில்லுன்னு ஒரு காதல் படம் கெளதம் மேனனுக்கு பலவிதங்களிலும் முக்கியமானதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











