கர்ப்பமாக இருக்கிறேன்னு சொன்னதும் ஜி.வி. பிரகாஷ் நம்பவே இல்லை.. குழந்தை பிறப்பு பற்றி பேசிய சைந்தவி!

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பாடகி சைந்தவி தற்போது தனது கணவரை பிரிய முடிவு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் இனிமேல் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்றும் இருவரது வாழ்க்கை இனிமேலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பிரிவு ஒன்றே வழி என பதிவிட்டுள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரெஹானா மற்றும் அவரது கணவர் ஏ. வெங்கடேஷுக்கும் மகனாக கடந்த 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பிறந்தவர் தான் ஜி.வி. பிரகாஷ் குமார். 36 வயதாகும் ஜி.வி. பிரகாஷ் அதற்குள் தனது மனைவியை பிரியும் முடிவுக்கு வந்து விட்டார்.

GV Prakash Kumar won t believe i am pregnant even i showed my pregnancy kit - Saindhavi interview

சைந்தவிக்கும் ஜி.வி. பிரகாஷுக்கும் ஒரு வயது வித்தியாசம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டு தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், திடீரென இப்படியொரு முடிவை இருவரும் எடுத்துள்ளனர். இந்நிலையில், குழந்தை பிறக்கும் நேரத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் குழந்தை உண்டானதை தனது கணவரிடம் சொன்ன போது அவர் நம்பாதது குறித்தும் சைந்தவி பேசிய த்ரோபேக் பேட்டி தற்போது அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

7 ஆண்டுகளுக்கு பிறகு: ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவிக்கு கடந்த 2020ம் ஆண்டு 'அன்வி’ எனும் பெண் குழந்தை பிறந்தது. பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டாலும் திருமணத்துக்கு பிறகும் பல வருடங்கள் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். பெண் குழந்தை பிறந்த அனுபவத்தையும் முதன் முதலாக கருவுற்ற செய்தியை ஜி.வி. பிரகாஷிடம் சொன்ன போது அவரது ரியாக்‌ஷன் குறித்தும் சைந்தவி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

பிரெக்னன்ஸி டெஸ்ட் காட்டியும் நம்பல: குழந்தை உருவானதை உணர்ந்த நிலையில், பிரெக்னன்ஸி டெஸ்ட் அதிகாலையில் எடுத்து பார்த்தேன். பாசிட்டிவாக வந்ததும் ஜி.வி. பிரகாஷிடம் போய் காட்டினேன். தூக்கத்தில் இருந்த அவர், இது என்ன தெர்மாமீட்டரா எனக் கேட்டார். காலங்காத்தால தெர்மாமீட்டரை நான் ஏன் காட்டப் போறேன்னு நினைச்சிக்கிட்டு இது பிரெக்னன்ஸி டெஸ்ட் கிட் என்றேன். யாரோடதுன்னு கேட்டார். என்னோடது தான் பேபி ஃபார்ம் ஆகியிருக்குன்னு சொன்னதும் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விட்டார்.

ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் தான்: அதன் பின்னர் 11 மணிக்கு எழுந்து வந்து காலங்காத்தால நீ எங்கிட்ட ஏதாவது சொன்னியா ஏதோ கனவுல பேசுனது போல இருந்துச்சுன்னு சொன்னாரு, மறுபடியும் அதை எடுத்துக் காட்டி காலையில் நான் தான் சொன்னேன். கர்ப்பமாக இருக்கிறேன் என்று மீண்டும் சொல்லியும் அவர் நம்பவில்லை. அதன் பின்னர் டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து அந்த ரிப்போர்ட்டை பார்த்த பின்னர் தான் அப்போ உன் வயித்துல நம்ம பாப்பா இருக்கான்னு ஹேப்பி ஆனார் என சைந்தவி பேசியுள்ளார்.

மகளிடம் ரொம்பவே பாசம்: குழந்தை பிறந்ததும் அவருக்கு என்ன பண்றதுன்னே தெரியல, அவ்ளோ சந்தோஷப்பட்டார். எப்போது வீட்டில் இருந்தாலும் மகளுடன் தான் விளையாடிக் கொண்டிருப்பார் என சைந்தவி அந்த பேட்டியில் கூறியுள்ளார். இருவரும் தற்போது பிரிய முடிவு செய்த நிலையில், அந்த பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவில்லையா? என்றும் அம்மாவிடம் தான் மகள் இருக்க வேண்டும் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X