ஜிவி பிரகாஷுக்காக தனது தோழிகளை டார்ச்சர் செய்த சைந்தவி.. யப்பா வேற லெவல்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ். ஆரம்பத்தில் இப்படி அவர் அடையாளப்பட்டாலும் தற்போது சிறந்த இசையமைப்பாளர், நல்ல நடிகர் என்ற அடையாளத்தோடு இருக்கிறார். அவரது பாடல்கள் பலரது ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கள்வன் திரைப்படம் கடைசியாக வெளியானது. இந்தச் சூழலில் அவர் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். வெயில் படம் வெயிட்டேஜான கதை என்பதால் அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

முன்னணி இசையமைப்பாளர்: வெயில் படம் கொடுத்த வெற்றியால் ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மேற்கொண்டு அடையாளப்பட்டார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்று குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அந்த பிரபல்யத்தை விட ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரபல்யம் அவரிடன் விரைவிலேயே வந்து சேர்ந்தது.
தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நடிப்பில் கவனம்: மேலும், அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது.
விவாகரத்து: இதற்கிடையே அவர் பள்ளி கால தோழியான சைந்தவியை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. இரண்டு பேருமே அதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் பள்ளி படிக்கும்போது அவர்கள் இருவரும் செய்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது இவர்கள் இருவரும் சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் படித்தார்கள். சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் சீனியராம். சைந்தவி நன்றாக பாட; ஜிவி பிரகாஷ் இசையமைக்க என கல்ச்சுரல் விழாவில் இவர்கள் இருவரும் மேடை ஏறுவார்கள். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிவிட்டதாம். ஆனால் ஆரம்பத்தில் அவர்களது நண்பர்கள் யாருக்குமே இரண்டு பேரும் காதலிக்கும் விஷயம் தெரியாதாம்.
சைந்தவியின் தோழிகள் இரண்டு பேருக்கு மட்டும்தான் இந்த காதல் விஷயம் தெரியுமாம். ஜிவியின் வகுப்பு மேல் மாடியில் இருக்க; அவரை காண வேண்டுமென்பதற்காக விஷயம் தெரிந்த இரண்டு தோழிகளை அழைத்துக்கொண்டு வேண்டுமென்றே ஜிவியின் வகுப்பை கடந்து செல்வாராம். அந்த சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சின்னதாக சிரித்துக்கொள்வார்களாம். இது மாதிரி ஒரு நாளைக்கு பலமுறை நடக்குமாம். இதனால் பொறுமை இழந்த அந்த தோழிகள், ஏன் சைந்தவி இப்படி பண்ற என்று செல்லமாக சலித்துக்கொள்வார்களாம். இதனை சைந்தவியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள், ச்ச எப்படி எல்லாம் லவ் பண்ணிருக்காங்க இப்போ போய் டைவர்ஸ் பண்றாங்களே என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











