ஏன் இதெல்லாம் கடவுளே?.. ஆபரேஷனுக்கு பிறகுதான் அந்த முடிவு.. ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவி ஓபன் டாக்

சென்னை: ஜிவி பிரகாஷும், பின்னணி பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். சூழல் இப்படி இருக்க தாங்கள் இரண்டு பேரும் பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் ஒரே காரில் அங்கிருந்து சென்றார்கள். இந்நிலையில் சைந்தவி கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், அனைவராலும் அறியப்படும் ஹீரோவுமான ஜிவி பிரகாஷும், பின்னணி பாடகி சைந்தவியும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்துவந்தார்கள். பிறகு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அன்வி என்கிற ஒரு மகள் இருக்கிறார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த அவர்கள் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தாங்கள் பிரிவதாக கடந்த வருடம் அறிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள்.

தனியாக வந்து ஒன்றாக சென்றார்கள்: இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்துக்கு தனித்தனியாக வந்து தங்களுக்கு விவாகரத்தில் பூரண சம்மதம் என்று தெரிவித்து மனுத்தாக்கல் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் ஒன்றாக ஒரே காரில் சென்றார்கள். அவர்கள் அப்படி செய்தது பலரிடமும் வரவேற்பை பெற்றது. டைவர்ஸ் அப்ளை செய்தாலும் புரிதலோடு இருக்கிறார்களே என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துவதனர் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash s ex-wife Saindhavi s throwback interview

சைந்தவியின் பேட்டி: இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சைந்தவி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கர்ப்பமடைவதற்கு முன்னரே நான் உடல் எடை கூடித்தான் இருந்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு வெயிட்டை குறைக்க பார்த்தாலும் அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. நான் குண்டாக இருப்பதை பார்க்கும் பலர் என்னிடம் வந்து சாப்பாட்டை கம்மியாக சாப்பிடுங்கள் என்பார்கள். அப்போதெல்லாம், நீங்களா எனக்கு சாப்பாடு போடுகிறீர்கள் என்று கேட்க தோன்றும். அறுவை சிகிச்சை மூலமாகத்தான் நான் குழந்தை பெற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு நான் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் நம்முடைய உடல் நமக்கு ரொம்பவே முக்கியம் என்பதை எனக்கு சொல்லிக்கொடுத்தன.

கஷ்டமான காலங்கள்: என்னுடைய வாழ்க்கையில் நான் கஷ்டமான காலகட்டங்களை கடந்து வந்திருக்கிறேன். எனக்கு ஏன் இதெல்லாம் நடக்கிறது கடவுளே என்று எண்ணிக்கொள்வேன். ஒருகட்டத்தில் இதற்கு ஏன் இவ்வளவு வருத்தப்பட வேண்டும் என்றும் யோசித்திருக்கிறேன். நம்மை வருத்தமடையும் செய்யும் நபருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தேன். சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களே காயப்படுத்தியிருப்பார்கள். அப்போது இவர்களே அப்படி செய்துவிட்டார்களே என்றுதான் தோன்றும்.

GV Prakash s ex-wife Saindhavi s throwback interview

இரண்டுமே ஒரு சூழல்தான்: இரண்டுமே ஒரே சூழ்நிலைதான். ஆனால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நாம்தான் முடிவு எடுக்க வேண்டும். நான் கவலைப்படவே மாட்டேன் என்றெல்லாம் இல்லை. நானும் மனுஷிதானே. ஆனால் உங்கள் மகிழ்ச்சியை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. உங்களால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. எனவே அதற்கு முயற்சி எதுவும் செய்ய வேண்டாம்" என்றார். அவரது இந்தப் பேச்சுதான் இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.

FAQs
சைந்தவி பாடிய முதல் பாடல் எது தெரியுமா?

அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காகா கொண்டைக்காரி பாடல்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X