அட்ஜெஸ்மெண்ட்டை நடிகைகளே கேட்டு வாங்குறாங்க.. திரைமறைவில் நடப்பதை ஓப்பனாக பேசிய கவர்ச்சி நடிகை!
சென்னை: மலையாள சினிமாவை ஒரு குழுக்கு குழுக்கிய விவகாரம் என்றால், அது ஹேமா கமிட்டி விவகாரம்தான். ஒட்டுமொத்த மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா சங்கத்தை கலைத்துவிட்டு, கேரளாவில் இருந்து தலைமறைவாகும் அளவிற்கு நடிகர்களின் இயக்குநர்களின் தயாரிப்பாளர்களின் முகத்திரையைக் கிழித்தது. இதன் தாக்கம் தமிழ் சினிமாவில் எதிரொலித்தது. தெலுங்கு சினிமாவில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமந்தாவே நேரடியாக பதிவிட்டிருந்தார். இப்படியிருக்கும்போது, கவர்ச்சி நடிகை சோனா பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
அதாவது, சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகர்கள், சில இயக்குநர்கள், சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கின்றேன், ஆனால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனக் கூறி, அதற்கு ஒப்புக் கொள்ளும் நடிகைகளுக்கு தங்களது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் இன்றைக்கும் சினிமா உலகைச் சுற்றி உள்ளது.

நடிக்க ஆசைப்படும் நடிகைகள் தாங்கள் வெள்ளித்திரையில் வரவேண்டும் என்ற காரணத்திற்காகவும், தங்களின் திறமைக்கான அங்கீகாரத்தை எட்ட, இதுபோன்ற துயரங்களை எதிர்கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டும், தங்களைத் தாங்களே சமாதனம் செய்து கொண்டும் வேறு வழி தெரியாமல், காமக் கொடூரர்களின் இச்சைக்கு இறையாகி விடுகின்றனர். இப்படி இருக்கும்போது, தாங்கள் பாதிக்கப்பட்டபோது இது குறித்து வெளியே கூறினால், அவரது குரல் ஒடுக்கப்பட்டுவிடுமோ என அஞ்சியும் அமைதியாக இருந்த நடிகைகள் ஏராளம். அதேநேரத்தில் இன்றைக்கு ஹேமா கமிட்டி மூலம், பலரது வலி வெளியே தெரியும்போது, நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் எனக் கூறினால், அன்றைக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என்ன ஆதாரம் இருக்கின்றது? என பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே கேள்வி எழுப்புகின்றது இன்றைய சமூகம்.

அதேநேரத்தில் இன்றைக்கு ஹேமா கமிட்டி மூலம், பலரது வலி வெளியே தெரியும்போது, நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் எனக் கூறினால், அன்றைக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என்ன ஆதாரம் இருக்கின்றது? என பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே கேள்வி எழுப்புகின்றது இன்றைய சமூகம்.
அட்ஜெஸ்மெண்ட்: இந்நிலையில் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட, நடிகை சோனா சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. அதில், முன்பெல்லாம் அட்ஜெஸ்மெண்ட் என்றால் தயங்கித் தயங்கி கேட்பார்கள்.

ஆனால் இன்றைக்கு சினிமா உலகில் மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், எனது காதுகளுக்கு வரும் செய்திகள் இன்னும் பயங்கரமாக இருக்கின்றது. அதாவது நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கேட்பதற்கு முன்னதாகவே நடிகைகளே தாங்களாகவே முன்வந்து அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசுகின்றார்கள் எனக் கூறினார்.

அதிர்ச்சி: நடிகை சோனாவின் இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. மேலும், இந்த விஷயத்தை அவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இவரது பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும், கவர்ச்சி நடிகை சோனா தற்போது சின்னத்திரையில் முன்னணியில் உள்ள டிவிகளில் சீரியல்களில் அம்மா, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.


Click it and Unblock the Notifications











