தயவு செய்து வந்து கெடுத்துடாதீங்க.. ரஜினியிடம் மனோபாலா ஓபனாவே இப்படி சொல்லிருக்காரே ப்பா!

சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், யூட்யூபர் என்று பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோரை வைத்து ஹிட் படங்களை கொடுத்த அவர் நடிகராகவும் கலக்கியவர். அவரது டயலாக் டெலிவிரியும், பாடி லாங்குவேஜும் அனைவரையும் ரசிக்க வைத்தவை. அதேபோல் சதுரங்க வேட்டை என்ற அருமையான படத்தையும் தயாரித்தவர். கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்த அவர் ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக இணைந்தவர் மனோபாலா. கமல் ஹாசன் செய்த பரிந்துரையாலும், மனோபாலாவுக்கு இருந்த திறமையாலும் அவரை உதவி இயக்குநராக இணைத்துக்கொண்டார் பாரதிராஜா. முதல் படத்திலேயே அவரது திறமையை புரிந்துகொண்ட பாரதிராஜா தன்னிடம் நெருங்கி பழகும் உதவி இயக்குநர்களில் ஒருவராக அவரை அணுக வைத்தார். இதன் காரணமாக பாரதிராஜாவின் முதன்மை சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

இயக்குநராக மனோபாலா: டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த மனோபாலா 1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, சிறை பறவை, தூரத்து பச்சை, ஊர்க்காவலன் என தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குநராக தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

Here are Manobala s Throwback Interview About Rajinikanth

நடிப்பில் அசத்திய மனோபாலா: இயக்கம் மட்டுமின்றி அவர் உதவி இயக்குநராக இருந்தபோதே சிறு சிறு வேடங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றன. இயக்கத்திற்கான வாய்ப்பு குறைந்ததை அடுத்து முழு நேர நடிகராக மாறினார் மனோபாலா. அப்படி அவர் நடித்த பிதாமகன், பேரழகன், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என ஏராளமான படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அவரது இயல்பான நடிப்பும், உடல்மொழியும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது.

தயாரிப்பாளர் டூ மரணம்: இயக்குநர், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அசத்தியவர் மனோபாலா. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் ஹெச்.வினோத்தை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் மனோபாலாதான். சதுரங்க வேட்டை போன்ற சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டை அதுவும் ஒரு புதுமுக இயக்குநரை நம்பி பணம் போடும் தைரியம் மனோபாலாவுக்கு இருந்ததை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் உடல்நல குறைவால் கடந்த 2023ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து மனோபாலா பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த ஒரு பேட்டியில், "ஊர்க்காவலன் திரைப்படம் எடுக்கும்போது முதல் இரண்டு நாட்கள் ரஜினியுடன் எனக்கு செட் ஆகவே இல்லை. ராதிகாவிடம்தான் அப்போதெல்லாம் புலம்பிக்கொண்டிருப்பேன். பிறகு ஒரு நாள் ஹோட்டலில் நான், ராதிகா உள்ளிட்ட பலரும் என்னுடைய ரூமில் உட்கார்ந்து அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தோம்.

தயவு செய்து கெடுத்துடாதீங்க: அப்போது ரஜினிகாந்த் எனது அறைக்கு ஃபோன் செய்து என்ன ஒரே சத்தமாக இருக்கு நானும் வரவா என்று கேட்டார். உடனே நானோ, 'அய்யோ சார் வேண்டாம். நீங்கள் வந்து தயவுசெய்து கெடுத்துடாதீங்க' என்று கேட்டேன். ஏனெனில் அவர் வந்தால் எல்லோரும் சைலெண்ட்டாகிவிடுவார்கள். சிறிது நேரத்தில் ரஜினி வந்தார். நான் நினைத்தபடியே அவர் வந்ததும் அனைவரும் சைலெண்ட் ஆகிவிட்டார்கள். அதை புரிந்துகொண்ட ரஜினி நான் வந்தேனு ஏன் சைலெண்ட் ஆகுறீங்க. ஜாலியா இருங்க என்று சொல்லி எங்களோடு ஜெல் ஆகிவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X