தொலைச்சிடுவேன் ராஸ்கல்.. திருமணத்தில் மாலையை தூக்கி வீசிய ரஜினிகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில்;அடுத்ததாக அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஜெயிலர் 2 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை பற்றி அறிவிப்பிற்கான வீடியோ ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவரது திருமணத்தில் நடந்த விஷயம் பற்றி தெரியவந்திருக்கிறது.

ரஜினிகாந்த் இந்த வயதிலும் பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. உலக அளவில் 700 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் காரணமாக மிகப்பெரிய உற்சாகத்தோடு காணப்படுகிறார் சூப்பர் ஸ்டார்.

throwback stories rajinikanth rajinikanth birthday

ரஜினிகாந்த்தின் குடும்பம்: ரஜினிகாந்த் லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக ரஜினியை பேட்டி எடுக்க லதா சென்றபோது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பிறகு காதலாக மாறியது. இருவருக்கும் திருப்பதியில் வைத்துதான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. முக்கியமாக லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதேபோல் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் முதலில் கோச்சடையான் படத்தை இயக்கினார். அதனையடுத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்.

விவாகரத்து: இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் இப்போது விவாகரத்து பெற்று பிரிந்திருக்கிறார்கள். அதேபோல் சௌந்தர்யாவும் முதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்று; அடுத்ததாக விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மகளுக்கு போலவே மூத்த மகளுக்கும் இன்னொரு திருமணம் செய்து வைக்க ரஜினிகாந்த் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கண்ணதாசன் பேட்டி: ரஜினிகாந்த் தனது இளமை காலத்தில் ரொம்பவே ஓபனாகவும், போல்டாகவும் இருந்தவர். தனது திருமணத்துக்கு வந்தால் உதைப்பேன் என்று பத்திரிகையாளர்களிடமும் கூறினார். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் கண்ணதாசன் இதுதொடர்பாக பேசுகையில், "தன்னுடைய திருமணத்துக்கு வரக்கூடாது என்று ரஜினி கூறிவிட்டார். ஆனாலும் எங்களது அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் போக சொன்னதால் பத்திரிகையாளர்களும் திருப்பதிக்கு சென்றுவிட்டோம்.

மாலையை வீசிய ரஜினிகாந்த்: நாங்கள் வந்தது அவருக்கு தெரிந்துவிட்டது. திருமணம் முடிந்து லதாவை அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது அவருடன் 7 பேர் இருந்தார்கள். அந்த சமயத்தில் யாரும் ஃபோட்டோ எடுக்காதீங்க என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டே வந்தார் ரஜினி. அந்த நேரம் பார்த்து ரஜினியின் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் ப்ரைவேட் ஃபோட்டோகிராஃபரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். வந்தவர் ரஜினிக்கு ஆளுயர மாலையை போட்டார். அப்போது அந்த ஃபோட்டோகிராஃபர் ஃபோட்டோ எடுத்துவிட்டார்.

ஃபோட்டோ எடுத்தவர் பத்திரிகையாளர் என்று ரஜினிகாந்த் தவறாக நினைத்துக்கொண்டு, 'ஏய் ஏன் ஃபோட்டோ எடுத்த தொலைச்சிடுவேன் ராஸ்கல்' என்று உச்சக்கட்ட டென்ஷனோடு அந்த மாலையை தூக்கி வீசினார். இதனால் அங்கிருந்த கூட்டமெல்லாம் சிதறி ஓடிவிட்டது. பெரிய சலசலப்பே நடந்துவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X