அப்பா கேட்ட ஒரே கேள்வி.. ஆடிப்போன தனுஷ்.. இப்படியும் நடந்திருக்கா?.. உண்மையில் பாவம்தான்

சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவரைப் பார்த்து அவரது தந்தை கேட்ட ஒரு கேள்வி குறித்து தெரியவந்திருக்கிறது.

கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

Here are the new details about Dhanush And His Father Kasthuri Raja


பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.

தனுஷ் 50: நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார் தனுஷ். மேலும் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடிக்கிறார்.

தந்தை கேட்ட கேள்வி: இந்தச் சூழலில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தனுஷிடம் கேட்ட கேள்வி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, தனுஷ் பள்ளி படித்துக்கொண்டிருந்தபோது சைக்கிள் மீது கொள்ளை பிரியம் கொண்டிருந்தாராம். ஆனால் கஸ்தூரி ராஜாவின் குடும்பமோ லோயர் மிடில் கிளாஸ் என்ற நிலையில்தான் இருந்ததாம். நிலைமை இப்படி இருக்க தந்தையிடம் சென்று சைக்கிள் கேட்டிருக்கிறார் தனுஷ். அதற்கு அவரோ, 'நீ முதல் ரேங்க் எடுத்தால் உனக்கு சைக்கிள்’ என்று சொல்லியிருக்கிறார்.

காப்பி அடிச்சியா?: தனுஷும் கஷ்டப்பட்டு படித்து தந்தை சொன்ன மாதிரியே முதல் ரேங்க் எடுத்துவிட்டாராம். அந்தக் கையோடு ஆசையாக தந்தையிடம் சென்று சொல்லியிருக்கிறார் தனுஷ். உடனே கஸ்தூரி ராஜாவோ, யாரை பார்த்து காப்பி அடிச்சு இந்த முதல் ரேங்க்கை வாங்கின என்று கேட்டாராம். இதனால் தனுஷ் ரொம்பவே அப்செட்டாகி ஆடிப்போனாராம். இந்தத் தகவலை தனுஷே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X