பசிச்சது குழாய் தண்ணி குடிச்சேன்.. அம்மா காசு இருக்காம்மா?.. சூரி கலங்கிப்போன நாள் தெரியுமா?
சென்னை: நடிகர் சூரி இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் அடுத்ததாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்தச் சூழலில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருடன் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
சூரி கோலிவுட்டின் முன்னணி காமெடியன். தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை ஹீரோ ரோலில் வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். மேலும் சண்டை காட்சிகளிலும் ரிஸ்க்கையும் எடுத்திருந்தார் சூரி. அது அவருக்கு பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. விடுதலை படத்தில் அவரது நடிப்பை பார்த்த பலரும் சூரி இனி ஹீரோவாக தொடரலாம் என்று நம்பிக்கை வார்த்தை அளித்தனர்.

கருடன்: பெரும்பாலானோரின் கருத்துப்படியே சூரி இப்போது ஹீரோவாகவே நடித்துவருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் சூரி. இந்தப் படங்கள் தவிர்த்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் கடந்த மே 31ஆம் தேதி ரிலீஸானது.
வசூல் வேட்டை: படத்துக்கு ரசிகர்கள் தங்களது முழு ஆதரவை கொடுத்திருக்கின்றனர். முக்கியமாக சூரியின் நடிப்பை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். இதுவரை படமானது 20 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூரி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். சூரியின் ஃபார்மை பார்த்த ரசிகர்கள் இனி சூரி கதையின் நாயகன் என்ற இடத்திலிருந்து கதாநாயகனாக மாறுவார் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
படையெடுப்பு: அவர்களின் ஆரூடம் பலிக்கும் விதமாக சூரியை கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஃபிக்ஸ் செய்ய ஏராளமான இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சூரி தனது ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டம் குறித்து பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சூரி பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், 'ஒருமுறை நான் தங்கியிருந்த ரூமுக்கு கீழே இருக்கும் STDக்கு எனது அம்மா ஃபோன் செய்தார். அப்போது சாப்பிட்டியா சூரி நாங்க இங்க பிரியாணி சமைச்சிருக்கோம் என்றார். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு சாப்பிட காசு இல்லை. அதனால் குழாய் தண்ணியை குடித்து வயிற்றை நிரப்பியிருந்தேன். அதை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை; உடனே எனது அம்மாவிடம், 'அம்மா காசு இல்லம்மா சாப்பிட.. குழாய் தண்ணியை பிடிச்சு குடிச்சேன். உனட்ட ஏதும் காசு இருக்காம்மா என்று கேட்டேன். உடனே எனது அம்மா கதறி அழுதுவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











