ஸ்டூடியோவுக்காக திணறிய ஏ.ஆர்.ரஹ்மான்.. அவரது தாய் செய்தது என்ன தெரியுமா?

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்றவர். 90களில் சினிமா துறைக்கு வந்தவர் இன்றளவும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

Here are the Unknown Details about A R Rahman Carreer Starting Stage

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர் என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார்.

பிஸி ஏ.ஆர்.ரஹ்மான்: கடந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் கடந்த வருடம் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னணி இசையும் உயர் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.

மாமன்னன் ரஹ்மான்: இந்த வருடத்தில் அவரது இசையமைப்பில் அயலான் திரைப்படமும், லால் சலாம் திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களில் அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் லால் சலாம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக லால் சலாம் படத்தின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை பேசுபொருளாக மாறும் என்று அவரது ரசிகர்கள் இருந்தனர். கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. அதில் ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

ட்ரெண்டாகும் ரஹ்மான் பேட்டி: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஸ்டூடியோவை திறந்தது குறித்து அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர் ,"நான் முதன்முதலாக ஸ்டூடியோ அமைத்தபோது என்னிடம் ஒரு ரூபாய்கூட இல்லை. அப்போது ஆம்ப்லிஃபையர் உள்ளிட்ட அடிப்படை கருவிகள்கூட என்னால் வாங்க முடியவில்லை. ரொம்பவே கஷ்டத்தில் இருந்தேன்.

தாய் செய்த உதவி: அப்போது என்னுடைய ஸ்டூடியோவில் ஏசி, ரெக்கார்ட்பெட் மட்டுமே இருந்தன. வேறு எதுவுமே கிடையாது. ஏனெனில் அதையெல்லாம் வாங்க என்னிடம் பணம் இல்லை. அப்போது என்னுடைய அம்மா அவரது நகையை அடகு வைத்து பணம் கொடுத்தார். அதை வைத்துதான் முதன்முதலாக ஒரு ரெக்கார்டரை ஸ்டூடியோவுக்காக வாங்கினேன். அந்தத் தருணம்தான் எனது வாழ்க்கையை மாற்றிய தருணம். எனது எதிர்காலம் இதுதான் என்று உணர்த்திய தருணம்" என்றிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X