Ajith - யாருக்கும் செய்யாத விஷயத்தை அஜித்துக்காக செய்த ஜெயலலிதா.. என்ன தெரியுமா?
சென்னை: தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார். இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் அவருக்காக ஜெயலலிதா செய்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவருக்கென்ற ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரது படம் வந்தால் திருவிழா போல் கொண்டாடிவருகிறார்கள்.

ஆசை நாயகன் அஜித்: திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார். தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற ஹிட்டடிக்க தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அஜித்.
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி முகத்தை பார்த்தார்.
ஏகே : தொடர்ந்து தீனா, வரலாறு உள்ளிட்ட படஙக்ள் அவருக்கு வெற்றி படங்களாக அமைய மீண்டும் தோல்வியை சந்தித்தார். பிறகு மீண்டு வந்து பில்லா படத்தில் வெற்றி கண்டால். அதன் பிறகும் அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார்.
அஜித்தின் மறுபக்கம்: பொதுவாக அஜித்குமார் யாருடைய பிரச்னைக்கும் செல்வதில்லை என்ற பிம்பம் இருக்கிறது. அதேபோல் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் அவர் தெரிவிப்பதில்லை.குறிப்பாக பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையாக மாற ஒட்டுமொத்தமாக அரசியல் விஷயங்களிலிருந்தும், மீடியாக்களில் இருந்தும் ஒதுங்கிவிட்டார். இருந்தாலும் ஜெயலலிதா மீது அவருக்கு கொஞ்சம் அதிகமாகவே மரியாதை இருந்ததாக கூறப்படுவதுண்டு.
ஜெயலலிதா செய்த விஷயம்: இந்நிலையில் அஜித்துக்காக ஜெயலலிதா செய்த விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (இப்போது உயிருடன் இல்லை) அஜித்துக்கு நெருக்கமானவர். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக பயணம் செய்திருக்கிறார்கள். வெற்றியின் திருமணத்துக்கு அஜித் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் கான்வாயும் வந்திருக்கிறது. அஜித்தை பார்த்த ஜெயலலிதா உடனடியாக தனது கான்வாயை நிறுத்தி காரிலிருந்து இறங்கிவந்து அஜித்திடம் நலம் விசாரித்துவிட்டு சென்றாராம். இதுபோல் அவர் யாருக்குமே செய்ததில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











