யார் திருமணத்திலும் நடக்காதது முதலில் அஜித் திருமணத்தில் நடந்தது.. செம நெகிழ்ச்சி சம்பவம் தெரியுமா?
சென்னை: அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கோலிவுட்டின் சிறந்த ஜோடி என்ற பெயர் பெற்ற அஜித் - ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தனது குடும்பத்தினர் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் அவர். இந்தச் சூழலில் அஜித் - ஷாலினி திருமணத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்றால் அது அஜித்தும், ஷாலினியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பதறிய அஜித்குமார்: அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட்டது. இதனால் பதறிப்போன அஜித்குமார் உடனே முதலுதவி செய்தார். அன்றைய தின ஷூட்டிங் முடிந்த பிறகு பொக்கே அனுப்பி நலம் விசாரித்தார் அஜித்.
சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க சரண்: அதனைத் தொடர்ந்து ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் மூன்று பேரும் அமர்ந்திருக்க, 'சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல' என போட்டு உடைத்திருக்கிறார் அஜித். அப்போதுதான் அஜித்துக்குள் காதல் இருப்பதை ஷாலினி லேசாக உணர்ந்திருக்கிறார்.
காதலை சொன்ன அஜித்: தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட்டார். உள்ளுக்குள் அஜித் மீது ஷாலினிக்கு ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது அப்பாவிடம் பேச சொன்னார் ஷாலினி. அதேசமயம் அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் பேசியிருந்தார். அதனையடுத்து அஜித்தும் நேரடியாக ஷாலினி தந்தையிடம் பேச அவரும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
புதிய விஷயம்: இந்தச் சூழலில் எந்த நட்சத்திரத்தின் திருமணத்திலும் நடக்காத ஒரு விஷயம் அஜித் - ஷாலினி திருமணத்தில் நடந்திருக்கிறது. அதாவது பொதுவாக நட்சத்திரங்களின் திருமணம் என்றால் விஐபிக்களும், விவிஐபிக்களும் வருவது வழக்கம். வருபவர்கள் பெரும்பாலும் சாப்ப்பிடமாட்டார்கள். ஆனால் அவர்களது கார் ஓட்டுநர்களுக்கோ நட்சத்திர கல்யாண விருந்தை சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்குமாம்.
இதனால் அஜித் திருமணத்தில் ஒரு விஷயம் செய்யப்பட்டதாம். அதாவது விஐபிக்களின் கார் வந்து நிற்கும் இடத்தில் அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு கையோடு கல்யாணத்தில் போடப்படும் சாப்பாட்டை ஒரு கவரில் வைத்தும், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டதாம். இதனால் அந்த ஓட்டுநர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள். அதுவரை எந்த நட்சத்திர கல்யாணத்திலும் இப்படி ஒரு நடைமுறையை செய்ததில்லையாம். இது கோலிவுட் முழுக்க பரவியதை அடுத்து சூர்யா - ஜோதிகா திருமணத்திலும் இதே முறை பின்பற்றதாம். இதனை பிஆர்ஓ நிகில் முருகன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இவர்தான் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு பிஆர்ஓவாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











