எம்ஜிஆர் மாதிரிதான் ரஜினியும்.. அப்படியெல்லாம் காண்பிக்க முடியாது.. கண்டிஷன் போட்ட ஆர்.எம்.வீரப்பன்
சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்,மெகா ஹிட் லிஸ்ட்டில் இருப்பவை. அப்படி அந்த லிஸ்ட்டில் மெகா ப்ளாக் பஸ்டர் கேட்டகிரியில் இருக்கும் படம்தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம்.

மெகா ஹிட் பாட்ஷா: மும்பையில் தாதாவாக இருக்கும் பாட்ஷா சூழ்நிலைகளால் தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாக அடங்கி வாழ்வது என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு சுரேஷ் கிருஷ்ணா மேக்கிங்கில் அதகளம் செய்திருப்பார். பாலகுமாரனின் வசனங்கள், தேவாவின் இசை, அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என முழுக்க முழுக்க கமர்ஷியல் பேக்கேஜாக உருவான படம் பாட்ஷா.
ரஜினி, ரகுவரன்: படத்தின் இரண்டு தூண்களாக இருந்தவர்கள் ரஜினிகாந்த்தும், ரகுவரனும்தான். ரஜினிகாந்த் தனது அதிரிபுதிரி ஸ்டைலால் அதிரடி காட்ட; ரகுவரனோ தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் பரபரப்பை கூட்ட என இரண்டு பேரும் போட்டிப்போட்டு நடித்திருப்பார்கள். அதிலும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் காட்சி இன்றுவரை அணையாத பட்டாசு ரகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாட்ஷா 2 நோ: ரசிகர்களுக்கு அந்தப் படத்தின் மீதான கிரேஸால் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதற்கு ரஜினிகாந்த் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார். பாட்ஷா என்றால் அது ஒன்றுதான் என்றும் சொல்லிவிட்டார். மேலும் அப்படியே படம் எடுத்தாலும் பாட்ஷாவாக நடிக்க நான் இருக்கிறேன் மார்க் ஆண்டனியாக நடிக்க யார் இருக்கிறார் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்: இந்நிலையில் பாட்ஷா படத்தின்போது நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது அந்தப் படத்தில் ரஜினிகாத்தை கம்பத்தில் கட்டி வைத்து ஆனந்த் ராஜ் அடிக்கும் காட்சியை படமாக்க தயாரானாதாம் படக்குழு. அப்போது அந்த சீன் பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனுக்கு தெரிந்ததும்; இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவை தனது அலுவலகத்துக்கு வர சொன்னாராம்.
அதெல்லாம் முடியாது: சுரேஷ் கிருஷ்ணாவிடம் வீரப்பன், எம்ஜிஆர் எப்படியோ அப்படித்தான் ரஜினிகாந்த்தும். எனவே அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும்படியான காட்சி வேண்டாம். அப்படி எடுத்து ரிலீஸ் செய்தால் அது ரொம்பவே ரிஸ்க் என்றாராம். இந்த விஷயம் சுரேஷ் கிருஷ்ணா மூலம் ரஜினியின் காதுகளுக்கும் சென்றுவிட; உடனே ரஜினிகாந்த்தும், சுரேஷ் கிருஷ்ணாவும் மீண்டும் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கி சொன்ன பிறகுதான் வீரப்பன் அந்தக் காட்சிக்கு ஒத்துக்கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











