மேனேஜரிடமா பேச சொல்றீங்க.. வேற மாதிரி டீல் செய்த பாலா.. சரண்டர் ஆன சியான் விக்ரம்

சென்னை: இயக்குநர் பாலா மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இப்போது அவர் வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவரும் பாலா இந்தப் படத்தின் மூலம் தரமான கம்பேக்காக கொடுக்க வேண்டுமென்று உழைத்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் ரிலீஸான ட்ரெய்லரும் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.

சேது படம்தான் சியான் விக்ரமுக்கு வாழ்க்கை கொடுத்த படம். அந்தப் படம்தான் பாலாவுக்கும் முதல் படம். சிம்ப்பிள் லைனை வைத்துக்கொண்டு மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் பாலா அசத்த; இளையராஜா இசையில் வெளுத்து வாங்க; நடிப்பில் விக்ரமோ அசுர பாய்ச்சல் செய்ய படம் பயங்கரமாக ஓடியது. இன்றுவரை கமர்ஷியல் ப்ளஸ் காதல் பாடங்களில் க்ளாசிக்காக ஜொலித்துக்கொண்டிருக்கிறது சேது. அந்தப் படத்துக்கு பிறகு பாலாவின் பெயர் தமிழ்நாடு முழுவதும் தெரிந்தது.

Throwback Stories Bala Vikram

முன்னணி இயக்குநர்: சேது படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு பாலா கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்த சூழலில் இரண்டாவது படமாக நந்தா படத்தை எடுத்தார். இந்தப் படம்தான் சூர்யாவின் பெயரை இண்டஸ்ட்ரியில் மாற்றி காட்டியது. குறிப்பாக நந்தாவுக்கு பிறகு சூர்யாவுக்கு வெரைட்டியான கதைக்களங்கள் வர ஆரம்பித்தன. அதிலும் அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் அப்போது பலரையும் உலுக்கி எடுத்தது என்பதுதான் உண்மை. அதனையடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் ஹிட்டாக; அதற்கு அடுத்து பாலா இயக்கிய படங்கள் பெரிதாக போகவில்லை.

என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

முக்கியமான படம்: பாலாவை பொறுத்தவரை வணங்கான் படம் முக்கியமான படம். ஏனெனில் முதலில் இந்தப் படத்தில் சூர்யாதான் நடித்தார். ஆனால் சில காரணங்களால் படத்தின் இரண்டாவது ஷெட்யூலோடு விலகிவிட்டார். அதற்கு பிறகுதான் அருண் விஜய் உள்ளே வந்தார். பாலா இயக்கிய வர்மா படத்தை விக்ரம் விரும்பாதது, வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியது, தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் என இயக்குநர் பாலா ரொம்பவே தடுமாற்றத்தில் இருக்கிறார். எனவே வணங்கான் படத்தை அவர் முக்கியமானதாக பார்க்கிறார்.

முரளியை வைத்து பிதாமகன்: இந்நிலையில் பிதாமகன் படத்தை முரளியை வைத்து உருவாக்க பாலா திட்டமிட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. அதாவது சாமி பட சமயத்தில் விக்ரமிடம் சென்று பிதாமகன் கதையை சொன்னாராம் பாலா. அதற்கு விக்ரமோ, கால்ஷீட் சம்பந்தமாக எனது மேனேஜரிடம் பேசிக்கொள்ளுங்கள் பாலா என்று சொல்லிவிட்டாராம். விக்ரம் அப்படி சொன்னதை பாலா கொஞ்சம்கூட விரும்பவில்லையாம்.

சரி இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவு செய்து முரளியிடம் சென்று பிதாமகன் கதையை சொன்னாராம் பாலா. முரளிக்கு கதை பிடித்தாலும் சம்பள விஷயத்தில் கறாராக இருந்தாராம். அவர் 25 லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்க; பேச்சுவார்த்தையில் 20 லட்சம் ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டதாம். முரளியிடம் பிதாமகன் கதை சென்ற விஷயத்தை தெரிந்துகொண்ட விக்ரம்; உடனடியாக சாமி பட ஷூட்டிங்கிலிருந்து கிளம்பி வந்து பாலாவை சந்தித்து நானே நடிக்கிறேன் என்று சொல்லி சரண்டர் ஆகிவிட்டாராம். இதனை பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X