சுத்தமான விவரம் இல்லாத ஆளா இருக்கீங்களே.. பாக்யராஜ் செய்த உல்டா வேலை... பாரதிராஜா சொன்ன சீக்ரெட்
சென்னை: திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இயக்கம், நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பிலும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். இந்தச் சூழலில் அவர் பற்றிய ஒரு செய்தி தெரியவந்திருக்கிறது.
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கி சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்த்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.
வரிசையாக ஹிட்டுகள்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.
சிறந்த நடிகர்: இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் பாக்யராஜ் அவ்வப்போது நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். வாகை சூட வா, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அட்டகாசமாக நடித்திருந்தார் அவர். இந்தச் சூழலில் பாரதிராஜாவுக்காக பாக்யராஜ் செய்த உல்டா வேலை ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன நடந்தது?: அதாவது பாரதிராஜா இயக்கிய முதல் இரண்டு படங்களான 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் ஆகிய இரண்டு படங்களும் செம ஹிட். அடுத்ததாக நிறம் மாறாத பூக்கள் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் பாரதிராஜா. அதனையடுத்து ஒரு தயாரிப்பாளர் பாரதிராஜாவை நம்பி பணம் போட ரெடியாகிவிட்டாராம். அதேசமயம் சம்பளத்தால் இந்த வாய்ப்பு போய்விடக்கூடாது என்று நினைத்து; 15,000 ரூபாய் சம்பளத்துக்கு படம் இயக்க ஒத்துக்கொண்டாராம்.
பாக்யராஜின் வேலை: அனைத்தையும் தயாரிப்பாளிடம் பேசிவிட்டு; தனது உதவி இயக்குநர்களிடம் நடந்ததை சொன்னாராம். உடனே பாக்யராஜோ, 'சரியான விவரம் இல்லாத ஆளா இருக்கீங்களே. உங்க ரேஞ்சே வெளில வேற. ரெண்டு படத்தை சூப்பர் ஹிட்டா கொடுத்துட்டு இந்தப் படத்துக்கு 15,000 ரூபாய் சம்பளம் வாங்குறீங்களே.. நான் பேசிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளரை பார்க்க சென்றாராம் பாக்யராஜ். அப்படி சென்றவர் மீண்டும் வந்து பாரதிராஜாவிடம் உங்களுக்கு இந்தப் படத்தில் 30,000 ரூபாய் சம்பளம் என்று சொன்னாராம்.
ஆச்சரியமடைந்த பாரதிராஜா அப்படி என்ன சொன்ன என்று கேட்க; 'அது ஒன்னும் இல்லை சார். நேரா தயாரிப்பாளர்ட்ட போனேன். எங்க டைரக்டரை இன்னும் வேற இடங்களிலிருந்து படம் பண்ண கூப்டுறாங்க.. அதனால் உங்க கம்பெனிக்கு பண்ண முடியாத சூழல்னு சொன்னேன். உடனே அவர் இல்லை நம்ம படத்தை முதலில் பண்ண சொல்லுங்க என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 30,000 ரூபாய் சம்பளம் என்று சொன்னேன். ஒத்துக்கொண்டார்' என்று கூறியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் கயல் தேவராஜ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











