ஆளு பெரிய கில்லாடி போல.. சொல்லிக்கொடுத்த வாத்தியாருடன் பீர் அடித்த GOAT வெங்கட் பிரபு
சென்னை: கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படமானது இன்று ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை கொண்டாடிவருகின்றனர். இந்தச் சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான குடும்பங்களில் ஒன்று கங்கை அமரன் குடும்பம். அவர் இயக்கம், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையை கொண்டவர். அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகராக சில படங்களில் நடித்தார். அதற்கு பிறகு சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தை இளைஞர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து மெகா ஹிட்டை அள்ளினார். இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்றவராக மாறிவிட்டார் வெங்கட் பிரபு.

முன்னணி இயக்குநர்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய சரோஜா, கோவா ஆகிய படங்களில் சரோஜா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கோவா படம் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதன் காரணமாக வெங்கட் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கு கிடைத்த ரிசல்ட் கோவா படத்துக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு.
மங்காத்தா, மாநாடு: மங்காத்தா படம் வெங்கட் பிரபுவின் கரியரை பீக்கிற்கு எடுத்து சென்ற படம். மெகா ப்ளாக் பஸ்டர் ஆன பிறகு அவர் இயக்கிய மாசு,பிரியாணி ஆகிய படங்கள் சறுக்கலை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக அவர் இயக்கிய கஸ்டடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
விஜய்யுடன் கூட்டணி: கஸ்டடி தோல்வி அவருக்கு கஷ்டத்தை கொடுத்தாலும்; அதற்கு மருந்திடும் வகையாக விஜய்யை வைத்து இப்போது GOAT படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. படமானது இன்று ரிலீஸாகியிருக்கிறது. அட்டகாசமான ஸ்க்ரீன் ப்ளே, சர்ப்ரைஸான கேமியோ ரோல்கள் என்று அவர் GOAT படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறிவருகிறார்கள். மேலும் வெங்கட் பிரபுவை தங்களது ஃபேவரைட் இயக்குநர்கள் லிஸ்ட்டிலும் சேர்த்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்.
வெங்கட் பிரபு பேட்டி: இந்நிலையில் வெங்கட் பிரபு கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் லண்டனில் படித்தேன். அங்கு நான் படித்த பல்கலைக்கழகத்திலேயே BAR இருக்கும். எனக்கு சொல்லிக்கொடுத்த ஃப்ரொபஸருடனேயே அமர்ந்து நான் பீர் குடித்திருக்கிறேன். பீர் குடித்துவிட்டும் க்ளாஸ் அட்டெண்ட் செய்திருக்கிறேன். அங்கு அது சாதாரணம். ஆனால் இங்குதான் தண்ணி அடிப்பதை பெரிய தவறாக பார்க்கிறார்கள். ஏனெனில் நமது கலாசாரம் அப்படி" என்றார்.


Click it and Unblock the Notifications











