ஊருக்கே உதவி செய்யும் KPY பாலாவுக்கு விஜே பிரியங்கா செய்த உதவி தெரியுமா?.. யப்பா செம நெகிழ்ச்சி
சென்னை: சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர் பாலா. அன்றிலிருந்து KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். பாலாவை பொறுத்தவரை ஓடி ஓடி உதவி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்த அவர்; பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனத்தை வாங்கி தந்தார். இப்படி பல உதவிகளை செய்துவரும் பாலாவுக்கு விஜே பிரியங்கா செய்த உதவி குறித்து தெரியவந்திருக்கிறது.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் கலகலவென தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரை கதவு திறக்கும் என்ற விதிக்கு ஏற்பட பாலாவுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், நாய் சேகர், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

பாலாவின் உதவிகள்: சினிமாவில் இப்போதைக்கு அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் ஏகப்பட்ட பேருக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் உதவ ஆரம்பித்த அவர் படிப்படியாக பலருக்கும் உதவ ஆரம்பித்தார். அதன்படி காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டபோது அவருக்கு உதவி செய்த வெகு சிலரில் பாலாவும் ஒருவர்.
ஆம்புலன்ஸ்: அதுமட்டுமின்றி மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்கு தனது செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவமும் பலரையும் நெகிழ செய்தது. குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் சூழலிலேயே இப்படிப்பட்ட உதவிகளை அவர் செய்வதால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த பெரிய மனம் யாருக்கும் வந்துவிடாது என்றும் பலர் கூறுகிறார்கள்.
சமீபத்திய உதவிகள்: கடந்த வருடம் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்ட போது குடும்பத்துக்கு தலா 1000 ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாயை வழங்கினார். அதுவும் பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுக்கொடுத்தது அதேபோல், வாணியம்பாடி அருகே இருக்கும் நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸை வாங்கிக்கொடுத்த அவர் நீலகண்டன் என்ற மாற்றுத்திறனாளிக்கு முச்சகர வாகனத்தையும்; பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் இளைஞருக்கு இருசக்கர வாகனத்தை சமீபத்தில் வாங்கிக்கொடுத்தார். சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில்கூட அவரை வெற்றிமாறன், லிங்குசாமி உள்ளிட்டோர் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலாவுக்கு பிரியங்கா செய்த உதவி: இந்நிலையில் பாலாவுக்கு விஜே பிரியங்கா செய்த உதவி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது பாலா கல்லூரியில் பிஏ படித்துக்கொண்டிருந்தபோதுதான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். எக்கச்சக்க பதற்றத்தோடு முதல் எபிசோடை ஒழுங்காக செய்த அவர் இரண்டாவது எபிசோடில் ஒருகட்டத்தில் பதற்றத்தோடு அப்படியே நின்றுவிட்டாராம். சரி இத்தோடு கரியர் காலி என்று அவர் நினைக்கையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா, நடுவர்களிடம் சென்று, 'பாலா முதல் எபிசோடை நன்றாக செய்தார். இந்த முறை பதற்றமாகிவிட்டார் எனவே இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று ரெக்கமெண்ட் செய்தாராம்.
அதனால்தான் இவ்வளவும்: பிறகு அந்த வாய்ப்பு பாலாவுக்கு கிடைக்க இரண்டாவது முறை கலக்கிவிட்டாராம். மேலும் அந்த ஷூட்டிங் நடந்த சமயத்தில் பாலவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் தையல் போடப்பட்டிருந்ததை கவனித்த பிரியங்கா அவரிடம் 500 ரூபாயை கொடுத்து இனி பைக்கில் செல்ல வேண்டாம். காரில் செல் என்று அன்பு கட்டளையிட்டாராம். பிரியங்கா மட்டுமின்றி அமுதவாணனின் மனைவியும் பாலாவுக்காக நிறைய பேரிடம் பேசி ஷோக்களை வாங்கிக்கொடுத்தாராம். இப்படி அவருக்கு சிலர் செய்த உதவிகளை மறக்காமல்தான் பலருக்கு பாலா உதவி செய்கிறார் போல என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











