இளையராஜா கொடுத்த ட்யூன்.. ஒட்டுமொத்தமாக தூக்கிய இயக்குநர்.. கடுப்பான இசைஞானி
சென்னை: இளையராஜாவின் பெயரை தமிழ் சினிமாவிலிருந்து எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக இசையமைத்துவருகிறார். நம் முந்தைய தலைமுறை, நம் தலைமுறை, அடுத்த தலைமுறை என பல தலைமுறைகள் இளையராஜாவின் ரசிகர்கள். இப்போதும் தொடர்ந்து இசையமைத்துவரும் அவர் விடுதலை 2 உள்ளிட்ட படங்களுக்கு தனது இசையை கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் கொடுத்த ட்யூன் பிடிக்காததால் இயக்குநர் ஒட்டுமொத்தமாக தூக்கியது தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் இசையின் முகத்தை மாற்றி அமைத்தவர் இளையராஜா. அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வைரமுத்து சிந்து பைரவியில் எழுதியதுபோல் சேரிக்கும் சேர வேண்டும் அதற்கும் பாட்டு படி என்ற வரி உண்மையானது. ஆம் அவரால்தான் வரப்பில் நின்றவரும் வாய் திறந்து பாட ஆரம்பித்தார். தனது முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளையராஜா. பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர்.

பாவலர் க்ரூப்ஸ்: இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா. பிறகு பல போராட்டங்களை கடந்து சினிமாவில் அறிமுகமாகி தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.
கோட்டையில்ல கொடியுமில்ல அப்பவும் ராஜா: தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி அவரை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால் திறமை இருக்கும் ஒருவரை சினிமா ஒதுக்கி தள்ளிவிடுமா என்ன?. அதுபோல்தான் சினிமா இளையராஜாவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அவரிடம் கோட்டையும் இல்லை; கொடியும் இல்லை; இருந்தாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர்தான் இசை உலகின் ராஜாவாக இருப்பார்.
பயோபிக்: இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல் ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்: இளையராஜாவின் இசையில் அடுத்ததாக விடுதலை 2, இளையராஜா பயோபிக் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வரவிருக்கின்றன. இதன் காரணமாக ராஜாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் இளையராஜா கொடுத்த ட்யூன் பிடிக்காததால் அவரை படத்திலிருந்து இயக்குநர் ஒருவர் தூக்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கடைசி விவசாயி: அதாவது கடைசி விவசாயி படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். அந்தப் படம் தேசியவிருதுகூட வாங்கியது. முதலில் அந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டியிருந்ததாம். அவரும் சில ட்யூன்களை போட்டு மணிகண்டனிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் மணிக்கோ அந்த ட்யூன்கள் பிடிக்கவில்லை. இதனையடுத்து இளையராஜாவிடமே சொல்லாமல்; சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்திருக்கிறார். இது இளையராஜாவுக்கு உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்த; இசையமைப்பாளர் சங்கத்திடம் புகார் தெரிவித்தாராம். இளையராஜா புகர் கொடுத்தாலும் அவருக்கான சம்பளத்தை மணிகண்டன் கொடுத்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











