சுந்தர் சி -வடிவேலு பிரிய சந்தானம்தான் காரணமா?.. இது என்ன புது பஞ்சாயத்து.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு. இந்தச் சூழலில் அவருக்கும் சுந்தர்.சிக்கும் மோதல் ஏற்பட சந்தானம்தான் காரணம் என ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
சுராஜ் கூட்டணி: ஒருவழியாக பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டு சுராஜ் இயக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, படங்களில் நடித்த அவர் இப்போது மாரீசன் படத்தில் நடிக்கிறார். சுராஜுடன் வடிவேலுவுக்கு எப்போதுமே நல்ல வேவ் லென்த் இருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் வடிவேலு கண்டிப்பாக அடுத்த பரிமாண நடிப்பை வெளிப்படுத்துவார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
சுந்தர்.சி - வடிவேலு: இதற்கிடையே வடிவேலு - சுந்தர்.சி கூட்டணி சினிமாவில் க்ளாசிக்கான கூட்டணி ஆகும். சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த வின்னர், கிரி, ரெண்டு ஆகிய படங்களும், சுந்தர்.சிர்யுடன் நடித்த தலைநகரம், நகரம் ஆகிய படங்களின் காமெடி காட்சிகளும் இன்றுவரை வயிறு வலிக்க சிரிக்க வைப்பவை. அந்த அளவுக்கு இருவருக்குமான கெமிஸ்ட்ரி பட்டாசாக இருக்கக்கூடியது. ஆனால் இந்த நான்கு படங்களை தவிர்த்து இருவரும் இணைந்து கடந்த பல வருடங்களாகவே பணியாற்றவில்லை.
என்ன காரணம்: இந்நிலையில் சுந்தர்.சியும், வடிவேலுவும் இணைந்து பணியாற்றாததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தில் வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் சந்தானம் நடித்தது வடிவேலுவுக்கு சொல்லப்படவில்லையாம். அதுமட்டுமின்றி சந்தானம் தொடர்பான காட்சிகள் தனியாக எடுக்கப்பட்டு எடிட்டிங்கில் படத்துடன் சேர்க்கப்பட்டதாம். பட ரிலீஸுக்கு பிறகு இதை பார்த்த வடிவேலு உச்சக்கட்ட கோபமடைந்து இனி சுந்தர்.சி இயக்கத்திலோ, அவர் நடிக்கும் படத்திலோ பணியாறக்கூடாது என்று முடிவெடுத்தாராம்.
இருந்தாலும் நகரம் படத்தில் மட்டும் எப்படியோ நடிக்க ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார்களாம். பிறகு சில பிரச்னைகளால் வடிவேலு சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட அவர் இடத்தை சந்தானம் பிடித்துவிட்டார். சுந்தர்.சி படங்களிலும் தொடர்ந்து சந்தானமே நடிக்க ஆரம்பிக்க; வடிவேலுவுக்கு உச்சக்கட்ட கோபம் கொப்பளித்து வர இனி எந்தக் காலத்திலும் சுந்தர்.சியுடன் பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாக திரைத்துறையில் கூறுகிறார்கள். ஆனால் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











