பதறிப்போன ரஜினிகாந்த்.. இரவு முழுக்க தூங்காமல் இருந்த படக்குழு.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். படமானது அக்டோபர் மாதம் ரிலீஸ். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.
பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்து தெரிவித்திருந்தது. அந்தப் போஸ்டரில் ரஜினியின் கைகளில் கடிகாரங்களால் ஆன விலங்கு மாட்டப்பட்டிருந்தது. அதனையடுத்து படத்தின் கதை குறித்து பலரும் பல்வேறு யூகங்களை கிளப்பிவருகிறார்கள்.
பதறிய ரஜினி: இந்தச் சூழலில் அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங்போது ரஜினிகாந்த்துக்காக படக்குழு தூங்காமல் இருந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ரஜினிகாந்த் எப்போதும் ருத்திராட்சம் அணிவது நாம் அனைவரும் அறிந்ததே. ஒருசமயம் அருணாச்சலம் பட ஷூட்டிங்கில் ரஜினியின் ருத்திராட்சம் மிஸ் ஆகிவிட்டதாம். இதனால் ரஜினி ரொம்பவே பதறிப்போய்விட்டாராம். இதனை கவனித்த படக்குழு இரவு முழுக்க ஷூட்டிங் லைட்டை ஆன் செய்து தேட ஆரம்பித்திருக்கிறது. ஒருவழியாக காலையில் அந்த ருத்திராட்சம் கிடைத்துவிட்டதாம். அதன் பிறகுதான் ரஜினி கூல் ஆகியிருக்கிறார். அருணாச்சலம் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











