என் பொண்டாட்டிய லவ் பண்றியா?.. ஜோதிகாவுக்காக ஷூட்டிங் ஸ்பாட் சென்று மிரட்டிய சூர்யா!
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா - ஜோதிகா குறித்து டூரிஸ்ட் ஃபேமிலி, ராட்சசி படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஓபனாக பேசியிருக்கிறார்.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார்.
மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவானது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியான அப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நத்தார் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். சூர்யாவின் கரியரிலேயே அந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக அமைந்திருந்தது. ஆனால் படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார்.அப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.

தொடர்ந்து வதந்தி: சூழல் இப்படி இருக்க ஜோதிகாவால் சூர்யா வீட்டுக்கள் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த சில காலமாகவே தொடர்ந்து பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமின்றி சூர்யா மும்பைக்கு சென்று செட்டில் ஆகவே ஜோதிகாதான் காரணம் என்றும்; சென்னை வந்தால்கூட சிவகுமாரை ஜோதிகா சந்திப்பதில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று ஜோதிகா கொடுத்த ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கணவர்: ஆனால் சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். சூர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. இந்தப் படம் தவிர்த்து வேறு சில படங்களிலும் நடிக்கிறார் ஜோதிகா. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா பக்கா சப்போர்ட்டாக இருக்கிறார்.
கமலேஷ் பேட்டி: இந்நிலையில் ராட்சசி, டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரமான கமலேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "ராட்சசி படத்தில் நடித்தபோது ஒருமுறை சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தர். வந்திருர்ந்தவர், 'யார் அவன் கதிர் (கமலேஷ் ஏற்றிருந்த கேரக்டர்). கூப்பிடுங்க என்று சொன்னார். வந்தவர் ஏன் இப்படி கேட்கிறார் என்ற குழப்பத்துடன் அவர் முன் போய் நான் நின்றேன்.
பொண்டாட்டிய லவ் பண்றியா?: என்னை பார்த்து அவர், 'என்ன என் பொண்டாட்டிய நீ லவ் பண்ணுறியா?.. நைட் உன்னைப் பத்திதான் பேசுறா என்று சொன்னார். அதற்கு நானோ, இல்லை சார் அப்படி நடிக்க சொன்னாங்க நடித்தேன் என்றேன். அதற்கு அவரோ, 'அட சும்மா மிரட்டி பார்த்தேன் ப்பா. சாப்பிட்டியா என்று கேட்டார். இப்படி சூர்யா செம ஜாலியான ஆள். அதேபோல் ஜோதிகாவும் என்னுடைய பிறந்தநாளுக்காக ஒட்டுமொத்த செட்டுக்கும் பிரியாணி போட்டார். அவரும் என் மீது பாசமாக இருப்பவர்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











