என் படத்தை 5 முறை ஏன் பார்த்த?.. எப்படி பார்த்த?.. ஹீரோவிடம் செம டென்ஷனான ஷங்கர்

சென்னை: பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பயங்கரமான சறுக்கலில் இருக்கிறார். அவர் கடைசியாக இயக்கிய கேம் சேஞ்சர், இந்தியன் 2, 2.0 ஆகிய மூன்று படங்களுமே படுதோல்வியை சந்தித்திருக்கின்றன. அவர் மீண்டும் பழையபடி வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் நடிகர் மணிகண்டனிடம் கோபப்பட்ட விஷயம் தெரியவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று இப்போது ராஜமௌலியை சொல்வார்கள். ஆனால் அவருக்கு முன்னதாகவே அந்தப் பெயரை பெற்றவர் என்றால் ஷங்கர்தான். முதன்முதலில் ஜென்டில்மேன் படத்தை அவர் இயக்கினார். அந்தப் படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்படாவிட்டாலும் அதிலேயே செட்டுகள்,கிராஃபிக்ஸ்கள் எல்லாம் பட்டையை கிளப்பின. முதல் படமே மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறினார் ஷங்கர்.

throwback stories shankar manikandan

வரிசையாக ஹிட்டுகள்: ஜென்டில்மேன் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கிய காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ் என வரிசையாக ஹிட்டடித்தன. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பிரமாண்டத்தை எப்படியாவது வைத்துவிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் அவர். இதன் காரணமாக 90களிலேயே அவர் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். பிரமாண்டம் என்பது மட்டுமின்றி நல்ல ஃபிலிம் மேக்கர் என்கிற பெயரையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபுல் ஃபார்மில் ஷங்கர்: ஷங்கர் ஃபுல் ஃபார்மில் இருந்த காலகட்டம் என்றால் அது அந்நியன், சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களை இயக்கிய காலகட்டம்தான். இந்த மூன்று படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி இன்றுவரை தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கிய படங்கள் பெரிதாக போகவில்லை. மேலும் ஒரே மாதிரியான கதையைத்தான் ஒவ்வொரு படத்திலும் கொடுக்கிறார் என்று விமர்சனமும் எழ ஆரம்பித்தது.

கேம் சேஞ்சர்: கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கும் முன்னதாக அவர் இயக்கிய இந்தியன் 2 படம் தோல்வி மட்டுமின்றி ட்ரோலையும் சந்தித்தது. எனவே அடுத்ததாக அவர் இயக்கவிருக்கும் வேள்பாரி படத்திலாவது பழைய ஷங்கரை பார்க்கலாமா என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் இப்போது வளர்ந்துவரும் நடிகரான மணிகண்டனை ஷங்கர் திட்டிய சம்பவம் பற்றி தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது மணிகண்டன் பள்ளி படிக்கும்போது அவர் இருந்த ஏரியாவில்தான் அந்நியன் படத்தின் ஷூட்டிங் நடந்ததாம். அப்போது ஷங்கரிடம் சென்று ஆட்டோகிராஃப் வாங்கினாராம் மணி. ஷங்கரோ மணிகண்டனிடம் இருந்த பேனாவை வாங்கி கையெழுத்து போட போனாராம். அந்த சமயத்தில் நான் உங்களின் பாய்ஸ் படத்தை 5 முறை பார்த்திருக்கிறேன் என்று கூறினாராம். உடனே ஷங்கர், 'பாய்ஸ் படத்தை ஐந்து முறை பார்த்தியா?.. எப்படி பார்த்த ஏன் பார்த்த?' என்று கோபப்பட்டு திட்டினாராம். பிறகு சமாதானமாகி அன்புள்ள மணிகண்டனுக்கு என்று தனது ஆட்டோகிராஃபை போட்டுக்கொடுத்தாராம்.

முன்னதாக ஷங்கர் இயக்கிய படங்களிலேயே மோசமான விமர்சனத்தை சந்தித்த படம் என்றால் அது பாய்ஸ்தான். அடல்ட் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அடல்ட் ஜானர் படத்தை பள்ளி படிக்கும் சிறுவன் ஐந்து முறை பார்த்ததால்தான் ஷங்கர் கோபப்பட்டிருப்பார் போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X