தொட தங்கிய மனோஜ்.. நந்தனா செய்தது என்ன தெரியுமா?.. இப்படித்தான் இரண்டு பேருக்கும் காதல் உருவானது

சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு சமீபத்தில்தான் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த அவர் மரணமடைந்திருக்கிறார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு நந்தனா என்கிற மனைவுயும், ஆர்த்திகா, மதிவதினி என்கிற மகள்களும் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவருக்கும், நந்தனாவுக்கும் இடையே எப்படி காதல் என்பதை பார்க்கலாம்.

பாரதிராஜா தமிழ் சினிமாவில் எத்தனையோ பேரை உருவாக்கியிருக்கிறார். அப்படித்தான் அவரது மகன் மனோஜையும் தனது இயக்கத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் ஊருக்கெல்லாம் உழைத்தவரின் வீட்டில் எதுவும் தங்காது என்பது போல் மகனை வைத்து இயக்கிய முதல் படம் தோல்வியில் முடிந்தது. அதனையடுத்து மனோஜ் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அவற்றில் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் அவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. கடல் பூக்கள் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.

தொடர் தோல்விகள்: இந்த இரண்டு படங்கள் தவிர்த்து அவர் நடித்த பல்லவன், ஈர நிலம், சாதூரியன் என ஏகப்பட்ட படங்கள் தோல்வியையே சந்தித்தன. இருந்தாலும் பாரதிராஜாவின் மகன் என்கிற அடையாளத்தால் கண்டிப்பாக சினிமாவில் வென்றே தீர வேண்டும் என்கிற கட்டாயம் அவருக்கு தெரியாமலேயே அவருக்குள்ளே இருந்திருக்கிறது. இதற்கிடையே ஷங்கர், மணிரத்னம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்ததாலும்; ஏற்கனவே இயக்குநராக வேண்டும் என்கிற வெறி உள்ளுக்குள் இருந்ததாலும் இயக்கம் பக்கம் தனது கவனத்தை திருப்பினார் அவர்.

Here are Unknown Details about Manoj Bharathiraja Love With His Wife Nandhana

அங்கும் தோல்விதான்: அதன்படி சுசீந்திரனின் கதை மற்றும் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி தோல்வியை சந்தித்தது. உண்மையில் சொல்லப்போனால் இயக்குநர் ஏரியாவிலும் மனோஜ் ஜொலிக்க முடியாததால் திரைத்துறையில் ஒருசிலர் அவர் ஒரு மாதிரிதான் பார்த்தார்கள். ஆனால் மனோஜ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தன்னால் வென்று காட்ட முடியும் என்கிற தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது. இன்னும் சில படங்கள் இயக்க திட்டமிட்டிருந்தார்.

உயிரிழப்பு: இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பூரண நலத்துடன் இருந்த அவருக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இறுதி சடங்கு சென்னையில் இன்னும் சிறிது நேரத்தில் நடக்கவிருக்கிறது. முன்னதாக அவர் சாதூரியன் படத்தில் தன்னோடு நடித்த நடிகை நந்தனாவை காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

மனோஜின் பேட்டி: அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "சாதூரியன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் ஒரு வீட்டில்தான் நடந்தேன். அப்போதுதான் நந்தனாவை நான் முதன்முதலில் பார்த்தேன். பார்த்த நொடியிலேயே அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. நாங்கள் இரண்டு பேரும் கட்டிலில் அமர்ந்திருக்கும் மாதிரியும், நான் அவர் மீது கை போடுவது மாதிரியுமான காட்சிதான் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த முதல் காட்சி. அவர் மீது கையை போட என்னால் முடியவில்லை.

நந்தனாவின் செயல்: ஆனால் அவரோ, தன்னை தொடுவதால் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லி எனது கையை அவரே எடுத்து அவர் தோள் மேல் போட்டுக்கொண்டார். இறுதிக்கட்ட ஷூட்டிங்கின்போது அவரும் என்னை காதலிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்தபோது அவரை விட்டு போக மனதே இல்லை. அவரை மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் எனக்கு வந்தது. நான் புறப்பட்டு செல்லும்போது கலங்கிய கண்களோடு அவரும் என்னை பார்த்தார். பிறகு இருவரும் ஃபோனில் பேச தொடங்கினோம். பின்னர் திருமணம் செய்துகொண்டோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X