லிங்குசாமி சரக்கடித்தால் இவ்வளவு அலப்பறை போடுவாரா?.. ஆத்தாடி டேஞ்சரான ஆளா இருக்காரே ப்பா!
சென்னை: லிங்குசாமி தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். அவர் இயக்கிய ரன், பையா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. குடும்ப பாங்கான படத்தை எடுத்து கவனம் ஈர்த்தவர் ரன் படத்தின் மூலம் தனது பாதையை கமர்ஷியலுக்கு திருப்பிக்கொண்டார். அஞ்சான் படத்திலிருந்து அவரது கிராஃப் அதள பாதாளத்திற்கு சென்றது. அப்போதிருந்து இப்போதுவரை அவரால் எழவே முடியவில்லை. அவரது இயக்கத்தில் கடைசியாக தி வாரியர் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக மகாபாரதத்தை தழுவி ஒரு படத்தை அவர் இயக்கவிருக்கிறார்.
ஆனந்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லிங்குசாமி. முதல் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் பக்கா கமர்ஷியல் ஹிட்டாகின. குறிப்பாக ரன் படம் சாக்லேட் பாய் என்ற இமேஜிலிருந்து மாதவனை வெளியே கொண்டு வந்தது. அதேபோல் அவர் இயக்கிய சண்டக்கோழி படம் விஷாலின் கரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
அஞ்சானில் விழுந்த அடி: முன்னணி இயக்குநராக வலம் வந்த லிங்குசாமி சூர்யா, சமந்தா நடிப்பில் உருவான அஞ்சான் படத்தில் சறுக்கினார். படத்துக்கு முன்பாக அவர் கொடுத்த பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் படம் சுமாராக இருந்ததால் லிங்குசாமியை வறுத்தெடுத்தனர் ரசிகர்கள். அப்போது விழுந்தவர் இன்றுவரை எழவில்லை. மேலும் உத்தமவில்லனும் படுதோல்வியை சந்தித்ததால் இக்கட்டான நிலைக்கு சென்றார் லிங்குசாமி. அதுமட்டுமின்றி எண்ணி ஏழு நாள் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. மேலும் அந்தப் பட விவகாரம் அவரை நீதிமன்றம்வரை கொண்டு சென்றது.

எழ முடியாத லிங்குசாமி: உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களின் பிரச்னையால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மறுபக்கம் தான் இழந்த ஃபார்ம் என லிங்குசாமி அடி மேல் அடி வாங்கினார். இதன் காரணமோ என்னமோ தெரியவில்லை அவரால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. முக்கியமாக அஞ்சான் திரைப்படம் அவரை கடுமையான ட்ரோல் மெட்டீரியல் ஆக்கியது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தது.
மகாபாரதத்தை தழுவி: லிங்குசாமி பழையபடி மீண்டும் ஃபார்முக்கு தரமான கமர்ஷியல் படங்களை கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதற்கான வேலைகளிலும் அவர் இறங்கியிருப்பதாகவே தெரிகிறது. அதாவது மகாபாரதத்தை தழுவி அவர் ஒரு படம் இயக்கவிருப்பதாகவும்; அதனை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார். அதற்கு இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோர் எல்லாம் வாழ்த்தினையும் தெரிவித்திருந்தார்கள். மேலும் லிங்குசாமியின் பார்வையில் மகாபாரதமா என்று ரசிகர்களும் உச்சக்கட்ட ஆச்சரியமடைந்தார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் லிங்குசாமி தான் செய்த அலப்பறைகள் குறித்து கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறார். சமீபத்தில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் சினிமாவில் இயக்குநராக முயன்றுகொண்டிருக்கும்போது இஷ்டத்துக்கு குடிப்பேன், தூங்குவேன். ஏனெனில் அப்போதுதான் என்னை கன்ட்ரோல் செய்ய யாருமில்லையே. முக்கியமாக நான் குடித்தால் தலை தரையில் படும்வரை குடிப்பேன்.
தயாரிப்பாளர் திட்டிவிட்டார்: குடித்துவிட்டு ஏகப்பட்ட வம்புகளை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்; செய்திருக்கிறேன். ஒருமுறை படம் ஒன்று கமிட்டானேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பார்ட்டி ஒன்றுக்கு அழைத்தார். நான் குடித்தால் என்னை யாரும் கன்ட்ரோல் செய்ய முடியாது என்பதால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவரோ வலுக்கட்டாயமாக அழைத்தார். நானு சென்று குடித்துவிட்டு ஏதோ செய்துவிட்டேன் போல. அடுத்த நாள் காலை அவருக்கு நான் ஃபோன் செய்தேன்; அப்போது அவர் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.
அவ்வளவுதான் எனது வாழ்க்கை போய்விட்டது என்றே முடிவு செய்துவிட்டேன். அப்போது பிருந்தா சாரதிதான் என்னை சமாதானப்படுத்தி தியான மண்டபத்துக்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற பிறகு நண்பரும் இயக்குநருமான வசந்தபாலன் இன்னொரு தியான மண்டபத்துக்கு அழைத்து சென்றார். அங்கு தியானம் செய்ய ஆரம்பித்தேன். அப்போதிருந்து மது, புகை அனைத்தையும் விட்டுவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











