ஐஸ்வர்யா ராயின் திருமண பத்திரிகை.. வேண்டாமென திருப்பி அனுப்பிய நடிகர்.. இப்படியும் நடந்திருக்கா?

மும்பை: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேருக்கும் விவாகரத்து நடைபெறப்போகிறது என்று கடந்த வருடத்தில் தகவல்கள் பரவிக்கொண்டே இருந்தன. ஆனால் அதிலெல்லாம் உண்மை இல்லை என்பதை இரண்டு பேருமே தெளிவுப்படுத்திவிட்டார்கள். இந்தச் சூழலில் அவர்களது திருமணத்தின்போது நடந்த சம்பவம் குறித்து ஒன்று தெரியவந்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உலக அழகி என்று சொன்னாலே இந்தியர்கள் மனதில் ஐஸ்வர்யா ராய்தான் தோன்றுவார். அந்தப் பட்டத்தை வென்ற பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. மேலும் ஐஸ்வர்யா ராய்க்கும் நல்ல நடிகை என்ற பெயரும் கிடைத்தது. தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஹிந்தியில் அவரது கவனம் திரும்பியது. அங்கு அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது.

Throwback Stories Aishwarya Rai

சல்மான் கானுடன் காதல்: ஹிந்தியில் தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த அவர் அவ்வப்போது தமிழிலும் நடித்தார். அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ஹிட்டடித்தன. இதற்கிடையே அவர் சல்மான் கானை தீவிரமாக காதலித்துவந்தார். ஆனால் அந்தக் காதலில் சில டாக்சிக் விஷயங்கள் நடந்ததன் காரணமாக இரண்டு பேரின் காதலும் பாதியில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக்குடன் திருமணம்: சல்மான் கானை தொடர்ந்து விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா அந்தக் காதலையும் பிரேக் அப் செய்தார். அதற்கு பிறகு அமிதாப் பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

விவாகரத்தா அப்படினு யார் சொன்னது?: ஆனால் கடந்த வருடத்தில் ஒரு தகவல் பரவியது. அதாவது அபிஷேக்கிற்கும், ஐஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. எனவே அவர்கள் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. இந்தத் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று இரண்டு பேரும் தெளிவுப்படுத்திவிட்டார்கள். மேலும் சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

திருமண பத்திரிகை ரிட்டர்ன்: இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமண பத்திரிகையையும், ஸ்வீட் பாக்ஸையும் நடிகர் ஒருவர் திருப்பி அனுப்பிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது அனைவருக்கும் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றையும், திருமணம் தொடர்பான கார்டு ஒன்றையும் அமிதாப் பச்சன் வீட்டிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் நடிகர் சத்ருகன் சின்ஹா மட்டும் அந்த இரண்டையும் மீண்டும் அனுப்பியவர்களுக்கே அனுப்பிவிட்டாராம். அதற்கு காரணம் கூறிய அவர், 'திருமணத்துக்கே என்னை கூப்பிடவில்லை. பிறகு ஏன் ஸ்வீட் பாக்ஸ். அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டாவது அழைத்திருக்கலாம்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X