அய்யய்யோ எனக்கு நம்பிக்கை இல்லை.. சேர்கூட போடல.. கௌதம் மேனன் பற்றி தயாரிப்பாளரிடம் புலம்பிய கமல்ஹாசன்
சென்னை: கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். மின்னலே தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயாவரை தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதற்கிடையே நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் அவர் கடைசியாக டிராகன், டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய படங்களில் நடித்தார்.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். மாதவன், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இன்றுவரை அவரது படங்கள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டுவருவதை வைத்தே உணர்ந்துகொள்ளலாம் அவர் எந்த அளவுக்கு ஃபார்மில் இருந்தார் என்று.
ஸ்டைலிஷ் இயக்குநர்: அதேபோல் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர்களில் கௌதம் மேனன் முக்கியமானவர். அவரது இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் அவ்வளவு அழகாக காட்சியளிப்பார்கள். காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அத்தனையையுமே ஒட்டுமொத்தமாக மாற்றி வேறு ஒரு ஆளாக கேமரா முன் நிறுத்துவார் கௌதம் மேனன். இன்றுவரை சிம்பு, சூர்யா உள்ளிட்டோரின் ஆல்டைம் ஃபேவரைட் லுக் எது என்று ரசிகர்களிடம் கேட்டால் அதில் கௌதம் மேனன் இயக்கிய படத்தின் லுக்கும் இருக்கும்.

இடையில் அவருக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனைகள் உருவாகின. எனவே அவற்றை சரி செய்வதற்காக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிப்பிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் அவர் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட்டானது. படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகர்: தற்போதைய 2K கிட்ஸ்களை பொறுத்தவரை இயக்குநர்களில் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்றால் லோகேஷ் கனகராஜ் என்று கை காட்டுவார்கள். ஆனால் லோகேஷுக்கெல்லாம் முன்னோடியாக கௌதம் மேனனே கமலின் தீவிரமான ரசிகர். அப்படிப்பட்ட கௌதம் மேனன் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு என்ற படத்தின் மூலம் தரமான சம்பவம் செய்தார்.
மெகா ஹிட்: கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமல் ஹாசனை வேறு ஃப்ளேவரில் காண்பித்திருந்தார். கமலின் ஓபனிங் சீன்கூட இன்றுவரை மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குரியது என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு கமலுடன் கௌதம் மேனன் இணையவில்லை. இந்நிலையில் வேட்டையாடு விளையாடு பட ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
புலம்பிய கமல்ஹாசன்: அதாவது அமெரிக்காவில் 48 நாட்கள் அந்தப் படத்தை ஷூட் செய்வதற்காக கமலையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றதாம் படக்குழு. மஞ்சள் வெயில் மாலையிலே பாடலை எடுக்கும்போது கமலை இயக்குநர் கௌதம் நடக்கவிட்டுக்கொண்டே இருந்தாராம். ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனுக்கு ஃபோன் செய்து, 'உன் பணமெல்லாம் இங்கு வீணாப்போகுது.
சேர்கூட இல்லை: ஷூட்டிங்கே எடுக்கல. என்னை நடக்க விட்டுட்டே இருக்காங்க. பெரிதாக எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு சேர்கூட போட மாட்டேன் என்கிறார்கள்' என சொன்னாராம். அதற்கு தயாரிப்பாளரோ, 'கௌதம் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது' என சொல்லிவிட்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த தனது மகனை கமலை கவனிப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தாராம். இதனை மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











