அப்படி மட்டும் நினைத்துவிடாதீர்கள்.. எஸ்.ஜே.சூர்யாவிடம் வருந்தி பேசிய ரஜினிகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கும் அவர்; அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்படம் எப்படி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதோ அதுபோல் கூலியும் வெற்றியடைய வேண்டும் என்ற ஆவல் ரஜினியின் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் எஸ்.ஜே.சூர்யாவிடம் ரஜினிகாந்த் வருந்தி பேசிய விஷயம் குறித்து காணலாம்.
ரஜினிகாந்த் என்றாலே அனைத்து தலைமுறையினர்களும் ரசிப்பார்கள். அவரது நடை, உடை, பாவனை, டயலாக் பேசும் விதம் என அத்தனையையும் ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியிலிருந்து இத்தனை வருடங்களாக கீழே இறங்காமல் இருக்கிறார். அதேபோல் அவரது வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக அவரது எளிமையையும் பலர் சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமைக்கு உதாரணம்: உதாரணமாக எந்திரன் திரைப்பட ஷூட்டிங்கிற்கு செல்ல தாமதம் ஆனதால் உடனடியாக ஒரு போக்குவரத்து காவலரோடு இரு சக்கர வாகனத்தில் ரஜினி சென்ற சம்பவம் எல்லாம் உண்டு. அதுமட்டுமின்றி தன்னுடைய வீட்டுக்கு யார் வந்தாலும் அவரை வாசல்வரை வந்து வரவேற்பதும், அவர்கள் கிளம்பும்போது வாசல்வரை சென்று அனுப்பிவைப்பதும் என அவ்வளவு எளிமையாக இருப்பாராம். அவரது எளிமைக்காகவும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்போதும் பிஸி: 60 வயதை கடந்தாலே பலர் உற்சாகத்தை இழந்துவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த்தோ அப்படி இல்லை. 70 வயதை கடந்த பிறகும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்த அவர் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த வயதில்கூட இப்படி ஓடுகிறாரே என்பதை பார்த்து அவருடன் பணியாற்றும் திரைத்துறையினரே ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா கூலி?: இடையே ரஜினிக்கு சில படங்கள் தோல்வியாக அமைந்தன. எனவே அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாக பலரும் பேசினார்கள். ஆனால் அந்தப் பேச்சையெல்லாம் ஜெயிலர் படம் தவிடுபொடியாக்கியது. அதேசமயம் அடுத்து வெளியான வேட்டையன் திரைப்படமோ சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இதன் காரணமாக வேட்டையனில் விட்டதை எப்படியாவது கூலியில் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி ஜெயிலர் 2 படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
வசூல் சாதனை செய்யும்: ரஜினி மட்டுமின்றி அவரது ரசிகர்களும் இந்த இரண்டு படங்கள் மீது அதீத ஆர்வத்தை வைத்திருக்கிறார்கள். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிடம் ரஜினிகாந்த் வருந்தி பேசிய விஷயம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது எந்த ஒரு வளர்ந்துவரும் கலைஞரும் தன்னுடைய பட விழாக்களுக்கு ரஜினிகாந்த் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படித்தான் சூர்யாவும் விரும்பியிருக்கிறார்.
என்ன நடந்தது?: ஒருமுறை தன்னுடைய படம் சம்பந்தமான விழாவுக்கு ரஜினிகாந்த்தை அழைத்தாராம் எஸ்.ஜே.சூர்ய. ஆனால் ரஜினியோ, 'இல்லை சூர்யா நான் எந்த விழாவுக்கும் செல்வதில்லை. இப்போது உங்கள் பட விழாவுக்கு வந்தால் அனைத்து பட விழாக்களுக்கும் செல்வது போல் ஆகிவிடும். எனவே என்னால் வர முடியாது' என்று சொல்லிவிட்டாராம். சூர்யாவும் சரி என்று சொல்லிவிட்டாராம். சில நாட்கள் கழித்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஃபோன் செய்த ரஜினி, "பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமாவும் வந்து; தங்களுடைய மகனின் பட விழாவுக்கு வர வேண்டும் என்று கேட்டார்கள். நானும் தவிர்க்க முடியாமல் ஓகே சொல்லிவிட்டேன். எனவே அதை நீங்கள் டிவியில் பார்த்து நம்ம விழாவுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது அங்கு மட்டும் சென்றிருக்கிறாரே என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். பாக்யராஜின் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை" என்று வருந்தி பேசினாராம்.


Click it and Unblock the Notifications











