இவர்தான் டூப்புப்பா.. விஜயகாந்த்துக்கு பல்பு கொடுத்த இயக்குநர்.. கேப்டனின் பதிலடி என்ன தெரியுமா?

சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா ஹீரோக்கள் வரிசையில் எப்போதும் இருக்கக்கூடியவர் அவர். அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கிய அவர் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

விஜயகாந்த் என்றாலே பெரிய அறிமுகம் தேவையில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென தனி இடம் ஒன்றை அவர் தக்க வைத்திருந்தார். அவர் சினிமாவுக்குள் அறிமுகமான நேரத்தில் ரஜினியும், கமலும் உச்சக்கட்ட பீக்கில் இருந்தார்கள். அவர்களோடு போட்டிப்போடு விஜயகாந்த்தால் வெல்லவே முடியாது; இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார் என்று பலரும் கிண்டலடித்தார்கள். ஆனால் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, திறமை, உழைப்பால் இவரும் ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.

கிராமங்களில் ஃபுல் ஃபார்மில் விஜி: குறிப்பாக தமிழ்நாட்டு கிராமங்களில் ரஜினி, கமலைவிடவும் விஜயகாந்த்துக்குதான் மவுசு அதிகம். மேலும் அவர்களைவிடவும் இவருக்குதான் ரசிகர் மன்றங்களும் அதிகமாக இருந்தன.அந்த அளவுக்கு அவர்களுக்கு இவர் டஃப் கொடுத்தார். கருப்பான உருவம் என்று எவரெல்லாம் அவரை கிண்டல் செய்தார்களோ அவரெல்லாம் பிற்காலத்தில் அவரை வைத்து படம் எடுத்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் விஜயகாந்த்: சினிமாவில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் மக்களிடம் தனக்கு இருக்கும் அபிமானத்தையும் வைத்து கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் பயங்கரமாக ஆக்டிவ் அரசியலில் இருந்தபோது தைரியமாக தேமுதிக கட்சியை ஆரம்பித்து முதல் சட்டப்பேரவை தேர்தலையே கூட்டணி இல்லாமல் தனித்து சந்தித்து தனக்கென வாக்கு வங்கி இருப்பதை உணர்த்தினார்.இதனால் மற்ற கட்சிகள் கொஞ்சம் ஆடித்தான் போயின. உடனடியாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

Here are Unknown Throwback Incident About Vijayakanth

அரசியலில் நடந்த துரோகம்: விஜயகாந்த்தும் ஜெயாவுடன் கூட்டணி வைத்து அந்தத் தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். அந்த சமயத்தில் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே வாக்குவாதம் சட்டப்பேரவையிலேயே நடந்தது. உடனடியாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலரும் அக்கட்சியிலிருந்து விலக; விஜயகாந்த்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதிருந்து அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனை அவரது மகனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

உயிரிழந்த விஜயகாந்த்: உடல்நலம் சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருந்தாலும் பழையபடி அவரால் ஆக்டிவ்வாக இருக்க முடியவில்லை. எனவே பரபர அரசியலிலிருந்தும் கொஞ்சம் ஒதுங்கி இளைப்பாற ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இயக்குநருக்கு பதிலடி: இந்நிலையில் இயக்குநர் ஆர்.சுந்தரராஜனுக்கு விஜயகாந்த் கொடுத்த பதிலடி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னுடைய அடுத்த படத்துக்கும் சுந்தரராஜன் விஜயகாந்த்திடம் கால்ஷீட் கேட்டாராம். அதற்கு இவரோ இல்லை என்று சொல்லிவிட்டாராம். இதனால் கொஞ்சம் அப்செட்டில் இருந்தாராம் இயக்குநர். அந்த சமயம் பார்த்து ஸ்பாட்டில் அடுத்த சண்டை காட்சிக்காக ஒருவர், 'விஜயகாந்த்தின் டூப்பை ரெடி செய்யுங்கள்' என்று சொல்ல; சுந்தரராஜன் விஜயகாந்த்தை காட்டி, 'இவர்தான் டூப். அவர் உண்மையிலேயே மேலேயிருந்து குதிப்பவர். அவரை போய் டூப்புனு சொல்றீங்க. மேலேயிருந்து குதிக்கும் மாதிரி நடிக்கும் இவர்தான் உண்மையில் டூப்' என்று சொல்ல; உடனே சுதாரித்த விஜயகாந்த், 'அப்போ அவரை வைத்தே படத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே' என்று கூறிவிட்டு சென்றாராம். இந்த சம்பவத்தை எழுத்தாளர் ராஜநாயஹம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X