பாக்யராஜை அவமதித்தாரா இளையராஜா?.. இருவரும் பிரிய இதுதான் காரணமா?. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இயக்கம், நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பிலும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். இந்தச் சூழலில் அவருக்கும், இளையராஜாவுக்கும் நடந்த சண்டை குறித்து பார்க்கலாம்.
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.
வரிசையாக ஹிட்டுகள்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.
இசையிலும் தனி முத்திரை: பாக்யராஜ் இயக்கம், நடிப்பு மட்டுமின்றி இசையிலும் தனி முத்திரை பதித்தவர். இது நம்ம ஆளு, பொண்ணு பார்க்க போறேன், ருத்ரா, ஞானப்பழம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாக்யராஜ் தனது படங்களுக்கு தானே இசையமைப்பதற்கு முன்பு இளையராஜாதான் இசையமைத்தார். ஆனால் சிறு பிரச்னையால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இந்தச் சூழலில் அவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
என்ன நடந்தது?: அதாவது இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியபோது இளையராஜாவை பார்க்க அவரது ஸ்டூடியோவுக்குத்தான் செல்வாராம் பாக்யராஜ். அப்படி ஒரு படத்துக்காக சந்திக்க சென்றபோது இளையராஜா ஸ்டூடியோவில் இல்லையாம். அங்கிருந்த இளையராஜாவின் உதவியாளர் பாக்யராஜிடம், நீங்கள் இளையராஜாவை சந்திக்க வேண்டுமென்றால் அவரது வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பாக்யராஜோ, ஏன் அங்கு செல்ல வேண்டுமென்று கேட்டிருக்கிறார்.
வந்துட்டு போனதா சொல்லுங்க: அதற்கு அந்த உதவியாளரோ இல்லை அங்குதான் செல்ல வேண்டும் என்று சொல்ல; உடனே பாக்யராஜ், 'நான் பட வேலை சம்பந்தமா வந்திருக்கேன். அவரது வீட்ல விசேஷம்னா அங்க சென்று பார்க்கலாம். எப்போதும் நான் பட வேலையா இங்கதானே அவரை பார்ப்பேன். சரி இளையராஜா வந்தால் நான் வந்துட்டு போனதா சொல்லுங்க' என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
இந்த விஷயம் நடந்து முடிந்த பிறகு பாக்யராஜுக்கு இளையராஜாவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம். இதனால் மேலும் வருத்தமடைந்த இயக்குநர்; நாம் கூறியதை இளையராஜா தவறாக எடுத்துக்கொண்டார் அதான் எந்த அழைப்பும் வரவில்லை என்றும் தன்னை இளையராஜா அவமதித்துவிட்டார் என்றும் நினைத்துக்கொண்ட பாக்யராஜ் இசையை கற்றுக்கொண்டு இது நம்ம ஆளு படத்துக்கு முதன்முறையாக இசையமைத்தாராம்.


Click it and Unblock the Notifications











