Vijay - ரஜினி மூலம் விஜய்க்கு கிடைத்த பரிசு.. ஆஹா சூப்பர் மேட்டரா இருக்கே.. தளபதி சொன்ன விஷயம் உள்ளே
சென்னை: ரஜினியால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர் விஜய். ஆனால் சமீபகாலமாக அவருக்கும் ரஜினிக்கும் இடையேதான் போட்டி என்று பல பேச்சுக்கள் எழுந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் சில சம்பவங்களும் நடந்தன. இந்த சூழலில் ரஜினி மூலம் விஜய்க்கு கிடைத்த பரிசு குறித்து தெரியவந்திருக்கிறது. விஜய்யே அதுகுறித்து பேசியும் இருக்கிறார்.
விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் கலெக்ஷன் ரீதியாக பட்டையை கிளப்புகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களும் கூறுகின்றன.

லியோவும் அப்படியே: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருக்கின்றனவாம். அதனால் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக ஏறியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது.
தளபதி 68: அந்தவகையில் அவர் தற்போது தளபதி 68 படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக விஜய்க்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லபடுகிறது. படத்தின் ஷூட்டிங் இப்போது துருக்கியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
ரஜினி Vs விஜய்: இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள் ஜெயிலருக்கு முன்னதாக சரியாக போகவில்லை.குறிப்பாக வசூலும் ஒழுங்காக செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் நாற்காலியில் இருந்து ரஜினி இறங்கிவிட்டார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என தளபதி ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். இந்த விவகாரம் ஜெயிலர் ரிலீஸின்போது பற்றி எரிந்துகொண்டிருந்தது.
முற்றுப்புள்ளி வைத்த விஜய்: அதிலும் ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் ரஜினி சொன்ன காக்கா, கழுகு கதை இந்த விவகாரத்தை மேற்கொண்டு பரபரப்பாக்கியது. நிலைமை இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும் நீரு பூத்த நெருப்பாக இன்னமும் இந்த பிரச்னை கனன்றுகொண்டுதான் இருக்கிறது.
விஜய்க்கு வந்த பரிசு: இந்த நிலையில் காவலன் பட சமயத்தில் ரஜினி குறித்து விஜய் பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, அண்ணாமலை பட வசனத்தை பேசி காட்டித்தான் தனது தந்தையிடம் சினிமா ஆசையை வெளிப்படுத்தி ஒப்புதல் வாங்கினார் விஜய். அந்த அளவுக்கு அவர் ரஜினியின் தீவிரமான ரசிகர்.
விஜய் சிறுவராக இருந்தபோது ரஜினியுடன் எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஆசையாம். அது முதன்முறையாக நான் மகான் அல்ல படப்பிடிப்பின்போது நிறைவேறிவிட்டதாம். அதனையடுத்து ரஜினி நடித்த பணக்காரன் படத்தின் ஷூட்டிங் விஜய் வீட்டில் நடந்திருக்கிறது. அப்போதும் ரஜினியுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். இந்த இரண்டு புகைப்படங்கள்தான் விஜய்க்கு கிடைத்த மிக சிறந்த பரிசாம். அதனைத்தான் அவர் இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறாராம். இதனைத்தான் அவர் அந்தப் பேட்டியில் பேசியிருந்தார்.
இதனை பார்த்த பொதுவான ரசிகர்கள், ஏன் ப்பா அவர்தான் அவ்வளவு பெரிய ரஜினி ரசிகராக இருக்கிறார். ஆனால் ஏன் இன்னமும் ரஜினி vs விஜய் என்ற பஞ்சாயத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என சமூகவலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











