Vijay - அதை மட்டும் செஞ்சுடாதீங்க.. தளபதி விஜய்க்கு மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அதனையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சூழலில் விஜய்க்கு மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ் பற்றி தெரிய வந்திருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஏஸ்.ஏ.சி துணை: இப்படி விஜய்யின் கோட்டை பலமாக இப்போது இருந்தாலும் அதற்கான ஒவ்வொரு செங்கல்லையும் வைக்க ஆரம்பித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, சிறந்த கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களை விஜய் பக்கம் மடைமாற்றுவது என சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம். அவரது பக்கபலம் இருந்ததால்தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் சினிமாவில் விஜய்யால் நிலைக்க முடிந்தது என்று ஒருசிலர் கூறுவதுண்டு.
அரசியல் ஆசை: எந்த நேரத்தில் விஜய் குடும்பங்களை கவரும் ஹீரோவாக இருக்க வேண்டும், எந்த நேரத்தில் கமர்ஷியல் பாதையில் பயணிக்க வேண்டும் என எஸ்.ஏ.சி விஜய்யின் வளர்ச்சியை செதுக்கினார் என்றே சொல்லலாம். ஒருகட்டத்தில் கமர்ஷியலில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்த விஜய்க்குள் அரசியல் ஆசையை விதைத்தும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஐடியாவில்தான் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் மன்றமாக மாறி இப்போது மக்கள் இயக்கமாக இருக்கிறது.
மாணவர்களுடன் சந்திப்பு: அதேபோல் 234 தொகுதிகளிலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்தது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்த சொன்னது, சமீபத்தில்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியது என அவர் செய்வது ஒவ்வொன்றும் அரசியலுக்கான பாதைதான் என்றும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. மேலும், தனது மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு செயலையும் அரசியல் நோக்கியே நகர்த்துகிறார் விஜய் என்றும் பெரும்பாலானோரால் எண்ணப்படுகிறது.
அசிங்கப்பட்ட விஜய்: நடிகராக உள்ளே நுழைந்து தற்போது அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தன. இவரது முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்த பிறகு விஜய்யை உருவ கேலி செய்து ஒரு பத்திரிகை எழுதியது. இதுபோல் பல விமர்சனங்களையும், அசிங்கங்களையும் விஜய் சந்தித்திருக்கிறார்.
வயது ஏறாது: யாரெல்லாம் விஜய்யை பார்த்து அவர் சினிமாவுக்குள் வந்த புதிதில் உருவ கேலி செய்தார்களோ தற்போது அவர்களே மிரளும் அளவுக்கு அழகாக இருக்கிறார். வயது ஏற ஏற விஜய்க்கு மட்டும் அழகு கூடிக்கொண்டே செல்கிறது. GOAT படத்தின் படப்பிடிப்பில்கூட அவர் க்ளீன் ஷேவ் செய்துகொண்டு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பார்த்த பலரும் காலேஜ் பையன் மாதிரி இருக்கிறாரே என்று சிலாகித்துவருகின்றனர்.
விஜய் சொன்னது: இந்நிலையில் விஜய்க்கு மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது ப்ரியமுடன் படத்தின்போது விஜய்க்கு உடல் ரீதியாக பிரச்னை வந்துவிட்டதாம். இதனையடுத்து அவரிடம் மருத்துவர்கள் இனி நீங்கள் அதிகமான கனத்தை தூக்கக்கூடாது என்று கூறிவிட்டார்களாம். அதுவரை உடற்பயிற்சியின்போது வெயிட்டான ராடுகளை தூக்கும் வழக்கம் உடைய விஜய்; மருத்துவர்களின் அட்வைஸை அடுத்து குறைந்த எடை உள்ள பொருட்களை வைத்தே உடற்பயிற்சி செய்வாராம். அதுவும் தினமும் செய்யும் வழக்கம் அவரிடம் இல்லையாம். ஷூட்டிங் இல்லாத நாட்களில் சிறிது நேரம் செய்துவிடுவாராம். இதனை விஜய்யே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











